சாக்லெட் கப்ஸ் செய்முறை / Chocolate Cups Recipe !





சாக்லெட் கப்ஸ் செய்முறை / Chocolate Cups Recipe !

தேவையானவை  :

டார்க் சாக்லெட் பார் – 1 (சுமார் 20 கப்ஸ் செய்யலாம்),

பேப்பர் கப்ஸ் – தேவை யான அளவு,

பரிமாற ஏதேனும் ஒரு ஐஸ்கிரீம்.

செய்முறை  : 

சாக்லெட் கப்ஸ்
சாக்லெட் பாரை சிறு சிறு துண்டு களாக்கி ஒரு பாத்திர த்தில் போட்டு வைக்கவும். 

ஒரு கடாயில் தண்ணீர் கொதிக்க வைத்துப் பின் சாக்லெட் வைத்தி ருக்கும் பாத்திரத்தை அதனுள் வைத்து உருக்கவும்.

பின் அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து, சூடு சிறிது ஆறியபின் பேப்பர் கப்பின் மேல்புறம், தடவி விடவும். 

கீழ் மற்றும் மேல் பக்க ங்களில் இடைவெளி விடாமல் தடவவும். சிறிது நேரம் கழித்து பேப்பர் கப்பை உட்புறமாக உரித்து எடுத்தால் சாக்லெட் கப் ரெடி.

முன் கூட்டியே ரெடி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். பின் ஐஸ்கிரீம் போட்டுப் பரிமாறவும். 

கூடுதலான சுவையுடன் சாக்லெட் கப்பையும் சேர்த்து சாப்பிடலாம்.
Tags: