சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி?





சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : 
நூடுல்ஸ் – அரை கப், 

வெங்காயம் – 2 

கேரட் – 50 கிராம் 

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், 

கொத்த மல்லி – சிறிதளவு, 

தக்காளி சாஸ் – 3 ஸ்பூன் 

சோயா சாஸ் – 1 ஸ்பூன் 

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை : 

சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது
* கொத்த மல்லி, கேரட், வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும். 
* கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். 

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கேரட், உப்பு சேர்த்துக் கிளறவும். 

* கேரட் பாதியளவு வெந்ததும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும். 
* எல்லாம் சேர்ந்து வந்ததும் கடைசி யாக கொத்த மல்லி தூவி இறக்கி பரி மாறவும்.
Tags: