தக்காளி வெல்ல மிக்ஸ் குழம்பு செய்முறை / Tomatoes Mix Gravy Recipe !





தக்காளி வெல்ல மிக்ஸ் குழம்பு செய்முறை / Tomatoes Mix Gravy Recipe !

தேவையானவை :

நாட்டுத் தக்காளி - 500 கிராம், 

எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன், 

கடுகு - 1/2 டீஸ்பூன், 

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, 

சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன், 

தனியாத் தூள் - 1 டீஸ்பூன், 

கரம் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன், 

பெரிய வெங்காயம் - 2, 

உப்பு - தேவைக்கு, 

காய்ந்த மிளகாய் - 3-4, 

பொடித்த வெல்லம் - 1/2 டேபிள் ஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிது, 

பருப்புப் பொடி - 1 டேபிள் ஸ்பூன். 

செய்முறை

தக்காளி வெல்ல மிக்ஸ் குழம்பு

பருப்புப் பொடி... கடாயில் கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைத்துக் கொள்ளவும். 

காய்ந்த மிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பருப்புப் பொடி, தனியாத் தூள், சீரகத்தூள் கலந்து தனியே வைக்கவும். 

கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து, காய்ந்த மிளகாய், வெங்காய த்தை போட்டு வதக்கி, பொடித்த பொடி, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். 

பின்பு கரம் மசாலாத் தூள், பெருங்காயத் தூள், உப்பு, வெல்லத் துருவல், 250 மி.லி. தண்ணீர் ஊற்றி கலந்து, நன்கு வேக விட்டு மசித்து இறக்கவும். 

புளிப்பு, காரம், இனிப்பு கலந்த குழம்பை இட்லி, தோசை, சாதத் துடன் பரி மாறவும்.
Tags: