இறைச்சி வடை செய்முறை / Meat vadai recipe !





இறைச்சி வடை செய்முறை / Meat vadai recipe !

தேவையான பொருட்கள்
கைமா (கொத்துக்கறி) - 1/4 கிலோ

உருளைக் கிழங்கு - 1/4 கிலோ

முட்டை - 2

கொத்த மல்லி - சிறிதளவு (நறுக்கியது)

டால்டா - 200 கிராம்

எலுமிச்சம் பழம் - 1/2 மூடி

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

வெங்காயம் - 2 நறுக்கியது

பட்டை - சிறிதளவு

கிராம்பு - 3

ரஸ்க் தூள் - 50 கிராம்

இஞ்சி - சிறுதுண்டு (பொடியாக நறுக்கியது)

பூண்டு பல் - 5 (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

இறைச்சி வடை

* கைமாவைச் சுத்தம் செய்து, எலுமிச்சம் பழம் பிழிந்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். பின் நீரை வடித்து விட்டு வதக்கவும்.

* உருளைக் கிழங்கை வேக வைத்து மசிக்கவும். பட்டை, கிராம்பு இரண்டை யும் தூள் செய்யவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாய், கொத்த மல்லி இலை, உருளைக் கிழங்கு, பட்டை, கிராம்பு பொடி இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

* மட்டனுடன் இதை நன்கு மிக்ஸ் செய்யவும்.

* ஒரு பாத்தி ரத்தில் முட்டையை அடித்து ஊற்றி சிறிது உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.

* மட்டன் கலவையை இதில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டவும்.

* இதை வடை போல் தட்டி, காய்ந்த எண்ணெ யில் புரட்டி வேக வைத்து எடுக்கவும்.

இறைச்சி வடை ரெடி.
Tags: