சுவையான வெண்ணெய் புட்டு செய்வது எப்படி?





சுவையான வெண்ணெய் புட்டு செய்வது எப்படி?

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் இல்லாமல் இருந்தால் ஓரளவு வெண்ணெயை எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள், வெண்ணெய் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.  
சுவையான வெண்ணெய் புட்டு செய்வது எப்படி?
வெண்ணெயில் உள்ள கலோரிகள் எளிதில் கரையாது. மேலும் சர்க்கரை நோயாளிகள், இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும். 

ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவும், சக்தியை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெயைக் காட்டிலும் நெய் மிகவும் நல்லது. 

சின்னக் குழந்தைகளுக்கு வெண்ணெயை வாரத்துக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரையிலும், தினமும் ஐந்து முதல் பத்து கிராம் வரை சேர்த்துக் கொடுக்கலாம்.  வளரும் குழந்தைகள் தினமும் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். 

சூடான சிற்றுண்டிகளில் நெய் பயன்படுத்தினால், வாசனை ஊரைத் தூக்கும், சாப்பிடவும் தூண்டும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். பசி எடுக்கும் தன்மையைக் குறைத்து விடும். 

அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை தொடர்வது மட்டுமின்றி, உடல் பருமன் கூடி, குண்டான உடல் தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

ஆகவே, கவனம் தேவை.வாயில் போட்டதும் வெண்ணெய் போல் வழுக்கிக் கொண்டு செல்வதால் இப்பெயர் வந்திருக்கலாம். 

என் அம்மா செய்வது மாதிரியே செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினால் கிண்ணத்தில் ஊற்றி கவிழ்த்து எடுத்தேன். அவர் செய்வது போலவே வந்து விட்டது. பார்க்கவே அழகாக இருக்கும். சுவையும் தான்!

இதனை தட்டுகளில் ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.

தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப்

கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்

வெல்லம் - ஒரு கப்

தேங்காய்ப் பூ - ஒரு டீஸ்பூன் (விருப்ப மானால்)

ஏலக்காய் - 1 (பொடிக்கவும்)

உப்பு - துளிக்கும் குறைவாக (சுவைக்காக)

செய்முறை:
முதலில் பச்சரிசியைக் கழுவிக் கலைந்து ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான நீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும். மாவு நீர்க்க இருக்க வேண்டும்.கெட்டியாக இருக்க வேண்டு மென்பதில்லை.

ஒரு அடி கனமான வாணலி யில் ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். கடலைப் பருப்பைக் கழுவி விட்டு வாணலியில் உள்ள தண்ணீரில் போடவும்.

த‌ண்ணீர் கொதி வந்ததும் அரிசி மாவில் துளிக்கும் குறைவாக உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் தண்ணீரில் ஊற்றிக் கொண்டே கரண்டியால் விடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

கிண்டுவதற்கு whisk ஐப் பயன் படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.மாவு எல்லா வற்றையும் ஊற்றிய பிறகும் விடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லை யென்றால் மாவு அடிப் பிடிக்கும். மேலும் மாவு வேகாமல் உருண்டை உருண்டை யாக இருக்கும். இப்போது மாவு வெந்து கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.
இப்போது வெல்லத்தை பொடித்து (கல், மண், தூசு இல்லாமல்) போட்டுக் கிளறி விடவும். முதலில் கொஞ்சம் நீர்த்துக் கொள்ளும்.பிறகு வேக வேக இறுகி வரும்.

நன்றாக இறுகி வரும் போது தேங்காய்ப் பூ, ஏலக்காய் போட்டு நன்றாகக் கிளறி இறக் கவும். இப்போது சுவையான வெண்ணெய் புட்டு தயார். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகோ சாப்பிடலாம்.
Tags: