ருசியான கொத்துக்கறி இட்லி செய்வது எப்படி?





ருசியான கொத்துக்கறி இட்லி செய்வது எப்படி?

மட்டனை பொறுத்தவரை, நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும், நன்மை தரும் என்பார்கள். ஆட்டுக் கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது. 
ருசியான கொத்துக்கறி இட்லி செய்வது எப்படி?
உடல் சூட்டை தணிக்கக் கூடியது. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது. 

மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. 

அந்த வகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும். இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள். 
குளிர் இரத்தப் பிராணி, வெப்ப இரத்தப் பிராணி என்றால் என்ன?
இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள். 
இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்க வேண்டுமென்று, இந்த ஆட்டுத் தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.

கொத்துக்கறி என்றாலே அசைவ பிரியர்களின் நாவில் எச்சில் பெருகும். அந்தளவுக்கு விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய கொத்துக்கறி வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக் கூடியது.

தேவை யானவை: 

கொத்துக்கறி – தேவையான அளவு வெங்காயம் (நறுக்கியது ) – 1 கப் 

தக்காளி (நறுக்கியது ) – 1/2 கப் 

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ் ஸ்பூன் 

சீரக தூள் – 1 டீஸ் ஸ்பூன் 

கரம் மசாலா தூள் – 1/2 டீஸ் ஸ்பூன் 

மிளகாய் தூள் – 1 டீஸ் ஸ்பூன் 

கொத்த மல்லி, கறிவேப் பிலை – சிறிதளவு 

மஞ்சள் தூள் – சிறிதளவு எண்ணெய், 

உப்பு – தேவைக் கேற்ப 
விதை இறக்கம் கீழிறங்கா ஆண் விதைகளுக்கான அறுவைச் சிகிச்சை
செய்முறை: 
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிற மாகும் வரை வதக்கவும். 

இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கொந்தன‌ கறி யையும் போட்டு நன்றாக வதக் கவும். 

இந்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சமைக்கவும், கொத்துக்கறி நன்றாக வெந்தவுடன் அடுப்பி லிருந்து இறக்கி கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை தூவி தனியே வைக்கவும்.

இட்லி தட்டில் சிறிதளவு மாவை ஊற்றி கொத்துக்கறி கலவையை அதன் மீது போடவும். பின்னர் இக்கொத்துக்கறி கலவை மீது மீண்டும் சிறிதளவு மாவை ஊற்றவும் 
(மாவை ஊற்றும் போது கொத்துக்கறி மசாலா வெளியே தெரியாதபடி பார்த்துக் கொள்ளவும்) இந்த இட்லி களை ஆவியில் வைத்து எடுத்தால் சுவையான கொத்துக் கறி இட்லி தயார். 

இட்லியையும், கொத்துக் கறியையும் தனியாக சாப்பிடுவதை விட இவ்வாறு செய்து சாப்பிடும் போது சுவை அதிகமாக இருக்கும்.
Tags: