மொறு மொறு சேமியா அடை செய்வது எப்படி?





மொறு மொறு சேமியா அடை செய்வது எப்படி?

தினமும் இட்லி, தோசை,பொங்கல் செய்து போர் அடிக்குதா? அப்போ இதனை செய்து பாருங்க. சேமியாவை வைத்து உப்புமா செய்து இருப்போம், கேசரி செய்து இருப்போம். ஆனால் சேமியா வைத்து புட்டு செய்து இருக்கீங்களா? 
மொறு மொறு சேமியா அடை செய்வது எப்படி?
அரிசி மாவு புட்டு, கோதுமை மாவு புட்டு மற்றும் ராகி மாவு புட்டு தான் தெரியும். இதென்ன! சேமியாவில் அடை என்று பாக்குறீங்களா?

ஆமாங்க இன்றைய பதிவில் நாம் சுவையான, சத்தான மற்றும் சுலபமான சேமியா புட்டு எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்த மற்றும் சத்தான சேமியா அடை. ராகி சேமியா, அல்லது அரசி சேமியா எதை பயன் படுத்தினாலும் சுவை நன்றாக இருக்கும். 

நாம் இன்று ராகி சேமியாவை வைத்து அடை செய்ய போகிறோம். சேமியாவில் கொலஸ்ட்ரால் கம்மியாக உள்ளது. மேலும் இதில் மிகுந்த கார்போ ஹைட்ரேட் உள்ளது. 

சோடியத்தின் அளவும் குறைவாக உள்ளது. எளிதில் செரிமானம் ஆகும். சரிங்க. சுவையான மொறு மொறு சேமியா அடை எப்படி செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் என்ன வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

வறுத்த சேமியா - ஒரு கப்

கெட்டி தயிர் - ஒரு கப்

அரிசி மாவு - ஒரு கப்

பெரிய வெங் காயம் - 1

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு, எண்ணெய், கொத்த மல்லி, கறிவேப் பிலை - தேவை யான அளவு

செய்முறை :

சேமியா அடை
தண்ணீர் சேர்க்காமல் சேமியாவை தயிரில் சுமார் 20 நிமிடம் வரை ஊற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும்.

இத்துடன் ஊரை வைத்த சேமி யாவை சேர்த்து சிறிது மிளகாய் தூள், உப்பு, கொத்த மல்லி, கறிவேப்பிலை, சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து, இந்தக் கலவையில் இருந்து சிறிய சிறிய அடைகளாக ஊற்றி, மெதுவாக பரப்பி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.

சுவையான மொறு மொறு சேமியா அடை ரெடி. சேமியா என்றால் தெறித்து ஓடும் சிறுவர்கள் இந்த அடையை சுவைத்து உண்பார்கள்.
Tags: