ராகிமாவு பால் கொழுக்கட்டை செய்முறை / Rakimavu milk pudding Recipe !





ராகிமாவு பால் கொழுக்கட்டை செய்முறை / Rakimavu milk pudding Recipe !

விநா யகர் சதுர்த்தி என்றாலே பெரிய வர்கள் முதல் சிறிய வர்கள் வரை கொண்டா ட்டம் தான் . 

ராகிமாவு பால் கொழுக்கட்டை

விநா யகர் சதுர்த்தி அன்றை க்கு சாமியை வணங் காதவர்கள் கூட அவருக்கு படைக்கப் பட்ட கொழுக் கட்டையை விரும்பி சாப்பிடு வார்கள் . 

கொழுக் கட்டை யில் பல வகைகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தி யன்று விநாய கருக்கு படைக்க ராகிமாவு பால் கொழுக் கட்டையை செய்வது எப்படி என்று பார்க்க லாம். 

தேவையான பொருட்கள்: 

 பால் - 5 கப் 

சர்க்கரை - 1 கப் 

கெட்டி யான தேங்காய் பால் - 1 கப் 

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 

கொழுக் கட்டைக்கு... 

ராகி மாவு - 1 கப் 

அரிசி மாவு - 1/2 கப் 

பால் - 1 கப் 

நெய் - 1 டீஸ்பூன் 

உப்பு - 1/4 டீஸ்பூன் 

தண்ணீர் - 1/2 கப் 

செய்முறை: 

ஒரு பௌலில் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் பால் ஆகிய வற்றை நீர் போன்று கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலி யில் அதை ஊற்றி, ஓரளவு கெட்டி யாகும் வரை கை விடாமல் கிளறி, கடைசி யில் நெய் சேர்த்து பிசைந்து, 

ஒட்டா மல் வரும் போது சிறு உருண் டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். 

மற்றொரு வாணலி யில் பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் ராகி உருண்டை களை சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

பிறகு அதில் தேங்காய் பால், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, 15 நிமிடம் கழித்து பரிமாற வேண்டும்.
Tags: