கோரைக் கிழங்கு சிறு நீர் பெரு க்கும்; வியர் வையை அதிக மாக்கும்; உடல் வெப்ப த்தை அகற்றும்; உடல் பல முண்டா கும்; வயிற்றுப் புழுக் களைக் கொல் லும்; மாத விடாயை தூண்டும்;  குழந்தை களுக் கான செரிமான சக்தியை அதிகரி க்கும்.
கோரைக்கிழங்கு
பதிவு ரிமை செய்யப் பட்ட பல மருந்து களில் கோரைக் கிழங்கு சேர்கி ன்றது. இந்தியா வின் சமவெளிப் பகுதி களில் வளர் கின்ற ஒரு புல்வகைச் சேர்ந்த சிறு செடி. தாவரம்.

தாவ ரத்தின் வேர்க் கிழங்குகளே கோரைக் கிழங்கு எனப் படும். தண் டுகள் மூன்று பட்டை யானவை. உறுதி யற்றவை. கோரைக் கிழங்கு இலைகள் தட்டை யானவை, கூரா னவை, நீண் டவை. கிழங் குகள் முட்டை வடிவ மானவை.

தமிழக மெங்கும், கடற்கரை ஓரங்கள், காடுகள், பாழ் நிலங் களில் தானே வளர் கின்றது. கோரைக் கிழங்கு காய்ந்த நிலை யில் நாட்டு மருந்து கடைகளில் கிடை க்கும்.

சில நாட்டு மருத்து வர்கள் கோரைக் கிழங்கை முத்தக் காசு என்றும் அழைக் கின்றனர். கோரைக் கிழங்கை காய வைத்து தூள் செய்து கொண்டு ½ தேக் கரண்டி வீதம் தினமும் காலை, மாலை

இரண்டு வேளைகள் 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசை வலி குண மாகும். கோரைக் கிழங்கு, காய்ச்சாத பசும் பால் ஆகிய வற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர வியர்வை நாற்றம் குண மாகும்.

இஞ்சி, கோரைக் கிழங்கு இரண் டையும் சம அள வாக அரைத்து பசை யாக்கி தேன் சிறிதளவு சேர்த்து சுண்டைக் காய் அளவு சாப்பிட குடல் புழுக்கள் வெளிப் படும்
கோரைக் கிழங்கு நான் கினை எடுத்து நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, குடி நீர் செய்து வேளை க்கு 2 தேக் கரண்டி அளவு 2 நாட்கள் உள்ளு க்கு கொடுக்க குழந்தை களுக்கு ஏற்படும் அஜீரணம் குண மாகும்.

பச்சை யான கோரைக் கிழங்கு களைச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அரைத்து மார் பகத்தல் பூசி வர தாய்ப் பால் சுரப்பு அதிக மாகும். கோரைக் கிழங்கு சூரணம் ½ தேக் கரண்டி அளவு காலை, மாலை தேனில் உட் கொள்ள புத்தி கூர்மை அதிக மாகும்.