மந்தாரைத் துவையல் செய்வது எப்படி?





மந்தாரைத் துவையல் செய்வது எப்படி?

மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது என்று ஒரு சித்தமருத்துவப் பழமொழியே உண்டு. அந்தஅளவுக்கு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது மந்தாரை. 
மந்தாரைத் துவையல்
சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.

உணவு சாப்பிடப் பயன்படும் இந்த இரண்டாகப் பிரிந்த இலைகளையும், பலநிற மலர்களையும் உடைய சிறுசெடி வகையாகும். இதில் செந்நிற மலருடையது பெரிதாய் காணப்படுகிறது. 

வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப் படுகிறது. இலை, பூ, வேர், பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. மந்தாரையானது திருக்கானப்பேர் (காளையார் கோயில்), திருத்திலதைப் பதியிலும் தலமரமாக விளங்கிறது.
இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன. 

ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின், போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன. ரத்தக் கட்டிகளை குணமாக்கும். 

சரி இனி மந்தாரை இலை பயன்படுத்தி டேஸ்டியான மந்தாரைத் துவையல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருட்கள்: 

மந்தாரை இலை - 100 கிராம்; 

மந்தாரைப் பூ - 100 கிராம்; 

கொத்த மல்லி - ஒரு கைப்பிடி யளவு; 

நல்லெண்ணெய் - தேவைக் கேற்ப; 

உளுத்தம் பருப்பு - 2 மேஜைக் கரண்டி; 

காய்ந்த மிளகாய் - 4; 

இஞ்சி - சிறிதளவு; 

புளி - சிறிதளவு; 

கடுகு -  சிறிதளவு; 

ஜீரகம் - 1 தேக்கரண்டி; 

கறிவேப் பிலை - சிறிதளவு; 

உப்பு - தேவை யான அளவு. 
தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி?
செய்முறை: 
ஆய்ந்து வைத்திருக்கும் மந்தாரை இலை, பூ மற்றும் கொத்த மல்லியை எடுத்து ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும். 

இன்னொரு கடாயில் உளுத்தம் பருப்பைப் போட்டு அது பொன் நிறமாகும் வரை வறுக்கவும். பிறகு காய்ந்த மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். 

கடைசியாக கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து, தயார் செய்து வைத்திருக்கும் கலவையை சேர்த்தால், நலம் தரும் மந்தாரைத் துவையல் தயார். 

பலன்கள்: 

மந்தாரை இலையில் உள்ள நார்ச்சத்து, மற்றும், கெரட்டின், ஆஸ்த்மா, மலச்சிக்கல், ரத்த மூலம், சீதபேதி, நீரிழிவு உள்ளிட்ட வியாதிகளைத் தீர்க்கும்.
ஹை ஹீல்ஸை தவிர்க்கவும் !
உடல் எடயைக் குறைக்க விரும்பு பவர்களும் உடலை சீரான எடையில் வத்திருக்க விரும்பு பவர்களும் மந்தாரை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
Tags: