சுவையான கிரீன் சட்னி உருளைக்கிழங்கு சாட் செய்வது எப்படி?

சுவையான கிரீன் சட்னி உருளைக்கிழங்கு சாட் செய்வது எப்படி?

உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. 
சுவையான கிரீன் சட்னி உருளைக்கிழங்கு சாட் செய்வது எப்படி?

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். 

இதனை வறுத்து உண்பதை விட வேக வைத்து உண்பதே நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. 

உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.

பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

சரி இனி உருளைக்கிழங்கு பயன்படுத்தி சுவையான கிரீன் சட்னி உருளைக்கிழங்கு சாட் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை: 

வேக வைத்த உருளைக் கிழங்கு (துண்டுகளாக்கவும்) – ஒரு கப், 

கிரீன் சட்னி – அரை கப், 

சாட் மசாலா பொடி – ஒரு டீஸ்பூன், 

கேரட் துருவல் – சிறிதளவு, 

ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – சிறிதளவு, 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

கிரீன் சட்னி செய்ய:

கொத்த மல்லி – ஒரு கப்,

பச்சை மிள காய் – 3,

புளி – நெல்லிக்காய் அளவு,

செய்முறை:
சுவையான கிரீன் சட்னி உருளைக்கிழங்கு சாட் செய்வது எப்படி?

உப்பு தேவை யான அளவு (எல்லா வற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பச்சை வாசனை பிடிக்காத வர்கள் கொத்த மல்லியை வதக்கி சட்னி செய்ய லாம்).

வாணலியில் எண்ணெயை காய வைத்து, வேக வைத்த உருளைக் கிழங்கு துண்டு களை பொரித்து எடுத்து வைக்கவும். 

 உருளைக் கிழங்கு துண்டு களின் மீது கிரீன் சட்னி, சாட் மசாலா பொடி, கேரட் துருவல், ஓமப் பொடி, உப்பு சேர்த்துக் கலந்து பரி மாறவும்.
Tags: