சுவையான அவல் உப்புமா செய்வது எப்படி?





சுவையான அவல் உப்புமா செய்வது எப்படி?

கிராமங்களில் இன்றும் அவல் விரும்பும் ஆள்கள் அதிகமாக இருக்கின்றனர். என்ன முன்பு போல் அவல் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை என்ற குறையுண்டு.
சுவையான அவல் உப்புமா செய்வது எப்படி?

ஊற வைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப்பட்டன. 

தற்போது மிஷின்கள் மூலம் தட்டையான அவல் கிடைக்கின்றது. இந்த முறையில் தயார் செய்வதால் அதில் உள்ள முழுசத்தும் நமக்கு கிடைக்கிறது. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. 

வைரமுத்து சொன்ன ஆபாச கவிதை வைரலாகும் ஆடியோ பதிவு உள்ளே !

காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம்.

தேவையானப் பொருள்கள்:


அவல் - 2 கப்

சின்ன வெங்காயம் - 5

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

கொத்து மல்லி இலை - ஒரு கொத்து

உப்பு - தேவை யான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு

உளுந்து

சீரகம்

பெருங்காயம் - ஒரு துளி

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

வேர்க்கடலை - 2 டீஸ்பூன்

முந்திரி - 3

பச்சை மிளகாய் - 1

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - 5 இலைகள்
ஆண் வேடமிட்டு பெண்ணை மணந்த பெண் வீடியோ !
செய்முறை:
சுவையான அவல் உப்புமா செய்வது எப்படி?

முதலில் அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவி விட்டு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.

MeToo என்றால் என்ன? வீடியோ !
(மஞ்சள் தூள் சேர்ப்பதாக இருந்தால் அவல் ஊறும் போதே சேர்க்கவும்.) சீக்கிரமே ஊறி விடும்.சுமார் ஒரு 5 நிமிடம் போது மானது.

நன்றாக ஊறியதும் தண்ணீரி லிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திர த்தில் வைத்து கட்டிக ளில்லாமல் உதிர்த்து விடவும். அவலைப் பிழிந்தெடுத் தால் குழையக் கூடாது. ஊறாமலும் இருக்கக் கூடாது. 

இவ்வாறு இருந்தால் தான் உப்புமா கட்டிகளில்லாமல் பொலபொல வென்று நன்றாக வரும். ஒரு வாணலி யில் எண்ணெய் ஊற்றிச் சூடேறி யதும் தாளிக்கக் கொடுத் துள்ளப் பொருள் களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.

அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வங்கியதும் அவலை சேர்த்துக் கிளறவும்.தீ மிதமாக இருக்கட்டும். அவல் ஏற்கனவே ஊறி இருப்ப தால் தண்ணீர் சேர்க்கக் கூடாது. 

அவலில் ஏற்கனவே உப்பும் சேர்த்தி ருப்பதால் ஒரு துளி மட்டும் லேசாக தெளித்து விடவும். அவல் சூடேறி யதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்து மல்லி இலைத் தூவி இறக்கவும். 

இப்போது சுவை யான அவல் உப்புமா ரெடி. நீண்ட நேரம் அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டாம். மேலும் மூடியும் போட வேண்டாம். அவ்வாறு செய்தால் குழைந்து விடும். 
'ரெட் அலர்ட்' அப்டின்னா என்னங்க உங்களுக்கு தெரியுமா?
குறிப்பு:

அவல் ஊறும் போதே உப்பு சேர்த்தால் தான் நன்றாக இருக்கும். செய்மு றையைப் பார்ப்ப    தற்குத் தான் நீளமாக உள்ளது. ஆனால் செய்வது மிகவும் சுலபம்.


இங்கு கறிவேப்பி லையை fresh ஆக பார்ப்பதே அதிசயம். சில சமயங் களில் தான் அவ்வாறு கிடைக்கும். அப்படி கிடைத்த போது தான் ஒரு ஆர்வக் கோளாறில் ஒரு முழு குச்சியைப் போட்டு விட்டேன்.
Tags: