ஸ்லோ குக்கர் ஆட்டு எலும்புச் சாறு செய்வது எப்படி?





ஸ்லோ குக்கர் ஆட்டு எலும்புச் சாறு செய்வது எப்படி?

ஸ்லோ குக்கரின் மூலம் செய்யப் படும் ஆட்டு எலும்புச் சாறு (போன் ப்ராத்) பல்வேறு பயன்களை கொண்டுள்ளது. நம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் இதிலுள்ள சத்துக்கள் வெகுவாக பயன்படுகின்றன.
ஸ்லோ குக்கர் ஆட்டு எலும்புச் சாறு
எலும்புகளை இணைக்கும் மூட்டுக்களுக்கு, ரத்தத்தை சுத்திகரிக்கும் ஈரலுக்கு, ரத்தம் உற்பத்தியாகும். 

எலும்பு மஜ்ஜைகளுக்கு, உணவை செரிமானம் செய்து சத்துக்களை பிரிக்கும் குடலுக்கு என எலும்பு சாறு கொடுக்கும் பயன்கள் அலாதியானவை. 

அசைவ பிரியர்களுக்கு கட்டாயமாக மட்டன் எலும்பு சூப் பிடிக்கும். இந்த எலும்பு சூப்பை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். 

அது மட்டுமல்லாமல் இந்த வெயிலுக்கு மட்டன் எலும்பு சூப் உடலை குளிர செய்யும். இதை மாலை நேரத்தில் குடித்தால் அருமையாக இருக்கும்.

ஆட்டுக் கறியை விட குறைவான விலையில் கிடைக்கும் ஆட்டு எலும்புகளை கொண்டு ஸ்லோ குக்கரில் சாறு செய்யும் வெகு சிம்பிள் ரெசிப்பி இதோ-

தேவையான பொருள் : 

1/4 கிலோ ஆட்டு எலும்பு

சின்ன வெங்காயம் - 10 ( சின்ன வெங்காயம் என்றால் 10 பெரிய வெங்காயம் என்றால் ஒன்று போதும் )

பூண்டு - 5 (பெரிய பல்)

தக்காளி - 2 ( அரிந்து கொள்ளவும் )

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

மல்லித்தழை - சிறிதளவு

உப்பு - அரை தேக்கரண்டி போதும்

செய்முறை :
ஸ்லோ குக்கர் ஆட்டு எலும்புச் சாறு
இவற்றை ஸ்லோ குக்கருடன் வரும் கல்லால் ஆன பாத்திரத்தில் இட்டு நீர் ஊற்ற வேண்டும். சரியாக எலும்புகள் மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றுவது தான் போதுமான அளவு.

லோ - ஹை - வார்ம் ஆகிய மூன்று ஆப்ஷன் களில் லோ ஆப்ஷனில் 8 மணி நேரம் வைக்க வேண்டும்.

எட்டு மணி நேரம் கழித்து அப்படியே எடுத்து நன்றாக வடிகட்ட வேண்டும். வெந்த எலும்புகளும் மற்றவையும் இனி தேவை யில்லை. இப்போது சுத்தமான எலும்புச்சாறு ரெடி.

நன்றாக மூடக்கூடிய பாட்டிலில் மூடி பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். தினமும் 200 மிலி குடித்து வந்தால் மிகவும் நல்லது. தேவைப்பட்டால் சூடுபடுத்தி மிளகு தூவி குடிக்கலாம்.
Tags: