உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்முறை / Potato Chips Recipe |





உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்முறை / Potato Chips Recipe |

தேவையான பொருட்கள்; 

உருளைக் கிழங்கு - அரைக் கிலோ (மீடியம் சைஸ் )

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை : 

உருளைக்கிழங்கு சிப்ஸ்
உருளை கிழங்கை நன்கு கழுவி துடைத்து எடுக்கவும். இப்படி மெலிதாக சீவி வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து தேவைக்கு எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.

மிளகாய்த் தூள் , உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சீவிய உருளைக் கிழங்கை போட்டு பக்குவமாக பொன்னிற த்தில் பொரித் தெடுக்கவும்.

சூட்டுடனேயே ரெடி செய்த பொடியைத் தேவைக்குத் தூவி குலுக்கவும். சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் ரெடி.

இதனை பிஸிபேலாபாத், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தக்காளி சாதம், புதினா சாதம், வெஜிடபிள் பிரியாணி இப்படி சொல்லிட்டே போகலாம், வெரட்டி ரைஸ் உடன் சாப்பிடலாம்.

ஏன் சும்மாவே சாப்பிடலாம். வாயு தொந்திரவு உள்ளவர்கள் கவனம்.
Tags: