செம்மயான மட்டன் டிக்கா மசாலா செய்வது எப்படி?





செம்மயான மட்டன் டிக்கா மசாலா செய்வது எப்படி?

அசைவ உணவில் பலருக்கும் பிடித்த உணவாக ஆட்டிறைச்சி உள்ளது. எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதனுடைய உறுப்பு இறைச்சியையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
செம்மயான மட்டன் டிக்கா மசாலா செய்வது எப்படி?
ஆட்டின் மூளையானது அதிக நினைவாற்றல், வலிமையான மூளை போன்ற நன்மைகளை அளிக்கிறது. 

ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.

ஆட்டின் இதயத்தை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது இதயத்திற்குப் நல்ல பலம் கிடைக்கும். ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்கிறது. 
ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது.

ஆட்டு இறைச்சியில், அதனுடைய கால்களை சூப் வைத்து குடித்து வந்தால், நம்முடைய எலும்புகள் மற்றும் கால்கள் நல்ல ஆற்றலை பெறுகிறது. பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். 
கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும். சரி இனி ஆட்டிறைச்சி பயன்படுத்தி செம்மயான மட்டன் டிக்கா மசாலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை 

ஆட்டிறைச்சி - 1/2 கிலோ 

தனியா விதை - 2 டீஸ்பூன் 

வெங்காய விதை - 2 டீஸ்பூன் 

வெங்காயம் - 1 கசகசா - 2 டீஸ்பூன் 

சீரகம் - 1 டீஸ்பூன் 

தயிர் - 3 டீஸ்பூன் 

பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 

இஞ்சி விழுது - 1 டீஸ்பூன் 

வெங்காய விழுது - 1 டீஸ்பூன் 

லவங்கம் - 4 

மிளகு - 8 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 
முதுகு வலி ஏற்படுவது எதனால்? எப்படி போக்குவது !
செய்முறை 
மட்டன் டிக்கா மசாலா
மட்டனை ஒரு அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும். தயிரை அடித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து ஆட்டிறைச்சி துண்டுகளில் தடவி, ஊற வைக்கவும். 

தனியா, கசகசா, சீரகம், வெங்காய விதை, லவங்கம், மிளகு இவற்றை வெறுமனே வறுத்துப் பொடி செய்யவும். தேவையான உப்பை இதில் சேர்த்துக் கலந்து ஆட்டிறைச்சி துண்டுகளில் புரட்டி வைக்கவும். 

இதை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும், ஊற வைத்த மட்டனைப் பொரித் தெடுக்கவும். 
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவா?
வெங்காய த்தை வட்டமாக நறுக்கி, மட்டன் டிக்கா மசாலாவை அலங்க ரிக்கவும்.
Tags: