மட்டன் தோ பியாஸ் செய்முறை / Mutton Tho pias Recipe |

மட்டன் தோ பியாஸ் செய்முறை / Mutton Tho pias Recipe |

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில். இதோ. வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட்.

மட்டன் தோ பியாஸ்
மட்டன் தோபியாஸ் செய்ய நீங்க ரெடியா! பேரே வித்தியாச மாக இருக்கிறதா.  சுவையும் அப்படித் தான். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க,

அசத்தலான மட்டன் தோ பியாஸ் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் பேராசிரியர் ஜெயலஷ்மி.

செய்ய தேவையானவை:

மட்டன் - அரை கிலோ

பெரிய வெங்காயம் - 125 கிராம் (நீளவாக்கில் நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 50 கிராம்

கொத்த மல்லித் தழை - தேவையான அளவு

விழுதாக அரைக்க: 

காய்ந்த மிளகாய் - 10 கிராம்

முழு மல்லி (தனியா) - 15 கிராம்

இஞ்சி - 15 கிராம்

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 125 கிராம்

தண்ணீர் - சிறிதளவு

செய்முறை: 

மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே கடாயில் விழுதாக அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் மசாலாவி லிருந்து பிரிந்து வரும்போது மட்டனைச் சேர்த்து வதக்கவும்.

பின்பு அதனுடன் வறுத்து வைத்தி ருக்கும் வெங்காயம் மற்றும் உப்பு, தேவையான அளவு வெந்நீர் சேர்த்துக் கலக்கி விட்டு மூடி வைத்து வேக விடவும்.

மட்டன் நன்கு வெந்து கிரேவி கெட்டியா னவுடன் அடுப்பி லிருந்து இறக்கி, கொத்த மல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
Tags: