சிக்கன் பக்கோடா செய்முறை / Chicken pakkota !





சிக்கன் பக்கோடா செய்முறை / Chicken pakkota !

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில். இதோ...  வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட். 

சிக்கன் பக்கோடா
விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'சிக்கன் பக்கோடா'.

தேவையானவை:

சிக்கன் (எலும்பு நீக்கியது) - கால் கிலோ

பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 50 கிராம்

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று

இஞ்சி- பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்

கடலை மாவு - இரண்டு டேபிள் ஸ்பூன்

கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு

கொத்த மல்லித் தழை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: 

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, மெல்லிய நீளமான துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். நறுக்கிய சிக்கன் துண்டுகளில் நன்கு தண்ணீர் வடித்து,

அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப் பிலை, கொத்த மல்லித் தழை, இஞ்சி- பூண்டு விழுது,

மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், கடலை மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டு களை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்து பொன் நிறமாகப் பொரித்து எடுக்கவும்.

சிக்கன் பக்கோடா வுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து சூடாகப் பரி மாறலாம்.

குறிப்பு: 

சிக்கன் பக்கோடா கலவை கெட்டியாக இருந்தால், அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கலவை நீர்த்துப் போனால் சிறிது கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
Tags: