புளி குழம்பு செய்வது | Tamarind Curry !





புளி குழம்பு செய்வது | Tamarind Curry !

தேவையான பொருட்கள் :

புளி – எலுமிச்சை பழம் அளவு

தண்ணீர் – 2 கப்

நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி

கடுகு தாளிக்க

கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி

காய்ந்த மிளகாய் – 4

கருவேப்பிலை – 5 இலை

பெருங்காயம் – சிறிதளவு

மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளித்து சேர்க்க :

நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி

வேர்க்கடலை – சிறிதளவு

கருவேப்பிலை – 10 இலை

செய்முறை :

புளி குழம்பு

புளியினை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, 2 கப் புளிதண்ணீரை கொஞ்சம் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

 கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைபருப்பு + காய்ந்த மிளகாய் + கருவேப்பில்லை தாளிக்கவும்.

இத்துடன் புளி தண்ணீர் + மஞ்சள் தூள் + உப்பு + பெருங்காயம் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இப்பொழுது புளி குழம்பு ரெடி. (குறிப்பு : இதனை 1 மாதம் வரை வைத்து இருந்து சாப்பிடலாம்.

அப்படி நிறைய நாள் வர வேண்டும் என்றால் எண்ணெயினை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.)
Tags: