டேஸ்டியான சிக்கன் முந்திரி குழம்பு செய்வது எப்படி?





டேஸ்டியான சிக்கன் முந்திரி குழம்பு செய்வது எப்படி?

பொதுவாக நட்ஸ் என அழைக்கப்படும் விதை வகையை சேர்ந்த முந்திரி, பாதாம் போன்ற உணவுகள் அதிக ஆரோக்கிய சத்துக்களைக் கொண்டவை. 
டேஸ்டியான சிக்கன் முந்திரி குழம்பு செய்வது எப்படி?
எனவே மக்கள் பல்வேறு உணவுகளிலும், பலகாரங்களிலும் இவற்றை சேர்ப்பதைப் பார்க்க முடியும். எனவே முந்திரியும் கூட ஒரு ஆரோக்கியமான உணவாகவே பார்க்கப்படுகிறது. 

முந்திரியை அதிகமாக உண்ணும்போது அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என கூறப்படுகிறது. முந்திரியானது முந்திரி பழத்திலிருந்து பெறப்படுகிறது. 

முந்திரி மரமானது பிரேசில் நாட்டை பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவதால் தற்சமயம் பல நாடுகளில் முந்திரி பயிரிடப்படுகிறது.

முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் உள்ள போதும் முந்திரி சில சமயங்களில் ஆபத்தை விளைவிக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன. 
அதிகமாக முந்திரியை சாப்பிடும்போது அது உங்களுக்கு ஒவ்வாமை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். அதிக அளவு முந்திரியை சாப்பிடும்போது அது சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

மேலும் நாள்பட்ட உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சரி இனி முந்திரி பயன்படுத்தி டேஸ்டியான சிக்கன் முந்திரி குழம்பு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையான பொருள்கள் :

சிக்கன் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 150 கிராம்

தக்காளி -2

பூண்டு - 12 பல்,

இஞ்சி - 1 துண்டு

நெய் - 50 கிராம்,

கறிவேப்பிலை - சிறிது

புதினா- 1 கைப்பிடி,

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

பச்சை மிளகாய் - 6

தேங்காய் - 1 மூடி

முந்திரி - 50 கிராம்

சீரகம் - 2 தேக்கரண்டி

கசகசா - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

தாளிக்க:
ஏலக்காய் - 3,

கிராம்பு - 3,

பட்டை - சிறிது,

பிரிஞ்சி இலை - 1,

எண்ணெய் - 5 ஸ்பூன்
கிச்சனில் பாத்திரம் கழுவும் தொட்டியை மின்ன வைக்க !
செய்முறை:
சிக்கன் முந்திரி குழம்பு
இஞ்சியை தோல் சீவி, நைசாக அரைக்கவும். சிக்கனை பெரிய துண்டு களாக வெட்டி, சுத்தம் செய்து இஞ்சி விழுது, சிறிது உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.

அரைக்க கொடுத்து ள்ளவை களை ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்து, நைசாக அரைத்து வைக்கவும். வெங்காயம், புதினா, தக்காளி யை பொடியாக நறுக்கி வைக்கவும். பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை தட்டி வைக்க வும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு தாளிக்க கொடுத்து ள்ளவை களை சேர்த்து பொரிந்த தும், நறுக்கிய வெங்காயம், தட்டிய பூண்டு போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி யதும், அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
நீங்கள் கட்டிய வீடு பாதுகாப்பாக உள்ளதா?
வேக வைத்த சிக்கனை தண்ணீருடன் சேர்த்து கொட்டி, உப்பு, தேவை யான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சிக்கன் நன்கு வெந்ததும் நறுக்கிய புதினா தூவி இறக்கவும்.
Tags: