சிற்றுண்டிகளுக்கு ஸ்ட்ராபெரி ஜாம் செய்வது எப்படி?





சிற்றுண்டிகளுக்கு ஸ்ட்ராபெரி ஜாம் செய்வது எப்படி?

இன்றைய அவசர உலகில் நிறைய சிற்றுண்டிகளுக்கு (டிஷ்க்கு) ஜாம் தொட்டு சாப்பிடுவதைத் தான் எல்லாரும் விரும்புகிறோம். 
சிற்றுண்டிகளுக்கு ஸ்ட்ராபெரி ஜாம் செய்வது எப்படி?
அதுவும் ஜாம் என்றால் போதும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் வாயை மூடிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். 

கடைகளில் விற்கப்படும் ஜாமில் ஏராளமான செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டுகள் போன்ற உடலுக்கு கெடுதலான விஷயங்களை சேர்க்கின்றனர். 
எனவே இதற்கு பதிலாக வீட்டிலேயே எளிதான முறையில் ஸ்ட்ராபெரி ஜாம் தயாரித்து கொடுக்கலாம். 
தேவையான பொருட்கள்

ஸ்ட்ரா பெரி – 30 / 3 கப்

சர்க்கரை – 1 கப்

எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி

செய்முறை
சிற்றுண்டிகளுக்கு ஸ்ட்ராபெரி ஜாம்
ஸ்ட்ராபெரியை எடுத்துக் கொள்ளவும், அதன் தண்டை நீக்கி விட்டு நன்கு கழுவவும். சிறிதாக நறுக்கி ஒரு பானில் எடுத்துக் கொள்ளவும்.

நாண், சப்பாத்தியுடன் சாப்பிட கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

சர்க்கரை சேர்க்கவும். நன்கு கலக்கவும். அதனை மூடி 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதனை வெளியே எடுக்கும் போது அதில் நீர் வெளியேறியிருக்கும் 

பின்பு அதனை 10 நிமிடம் அல்லது சிறிது நேரம் கூட கொதிக்க வைக்கவும்.நேரம் ஆக ஆக கெட்டியாகத் தொடங்கும். 
பின்பு அதனை இறக்கி 30 நிமிடம் வைக்கவும். மேலும் சிறிது கெட்டியாகும். பின்பு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஸ்ட்ராபெரி ஜாம் ரெடி!
Tags: