சுவையான ஹமூஸ் செய்வது எப்படி?





சுவையான ஹமூஸ் செய்வது எப்படி?

கறுப்புக் கொண்டைக்கடலை உள்நாட்டு வகையாகத் தற்போது கருதப் பட்டாலும், இது தென்கிழக்கு துருக்கியில் இருந்து வந்தது தான். 
ஹமூஸ் செய்வது
வெள்ளை கொண்டைக்கடலை இந்தியாவுக்கு வரும் முன்னரே, கறுப்பான கொண்டைக்கடலை நம் மண்ணைத் தொட்டு விட்டது. இப்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் பெருமளவு விளைவிக்கப் படுகிறது. 

இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அதே நேரம், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்று. 

கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டி ஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.

வெள்ளைக் கொண்டைக் கடலையைவிட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.

குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக் கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள் : .

வேக வைத்த வெள்ளை கொண்டைக் கடலை - 1/4 கப்,

வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்,

பூண்டு - 1 பல்,

ஆலிவ் ஆயில் - 4 டேபிள் ஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,

உப்பு, காய்ந்த மிளகாய் (விதை உடையாமல் பொடிக்கவும்) - தேவைக்கு.
செய்முறை : .

வெள்ளை எள்ளுடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நைஸாக அரைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நைஸாக இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும். 

பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன் அதன் ேமல் ஊற்றி காய்ந்த மிளகாய் தூவி, சப்பாத்தி, கேரட், வெள்ளரிக்காய் குச்சிகளுடன் பரிமாறவும்.
Tags: