உடல்நிலை சரியில்லை என்றால் அனைவரும் முதலில் பரிந்துரைப்பது பிரெட் தான். அதே போல் காலை உணவிற்காக பிரெட் டோஸ்ட், பிரெட் ஆம்லெட், பிரெட் ஜாம் என சாப்பிடுவார்கள். 
சுவையான பிரெட் கட்லெட் செய்வது எப்படி?
வீட்டில் எதுவுமில்லை பசியை போக்க வேண்டுமெனில் பிரெட் இருந்தால் உடனே டோஸ்ட் செய்து சாப்பிடுவது என பிரெட் பல வீடுகளில் பல வகைகளில் உதவுகிறது. 

தானியங்களான கோதுமை, ராகி போன்றவற்றில் செய்யப்படும் பிரெட்டுகளில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், இரும்புச் சத்து போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. 
சரி இனி பிரெட் கொண்டு சுவையான பிரெட் கட்லெட் செய்வது எப்படி?  என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள் : -

பிரெட் துண்டுகள் - 4,

கடலை மாவு - 4 டீஸ்பூன்,

மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : -
சுவையான பிரெட் கட்லெட் செய்வது எப்படி?
பிரெட் துண்டுகளை சதுர வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு குழிவான பாத்திரத்தில் கடலைமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு, 

தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல் காய்ந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பிரெட் துண்டுகளை கடலை மாவு கலவையில் தோய்த்து எடுத்துப் போடவும். 
இருபக்கமும் நன்றாக ரோஸ்டானதும் எடுத்து தக்காளி சாஸூடன் சூடாகப் பரிமாறவும்.