ரிப்பன் பகோடா செய்முறை !





ரிப்பன் பகோடா செய்முறை !

தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்

கடலை மாவு - 1 கப்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

பெருங்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணை அல்லது நெய் - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - ஒன்றரை டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்றாக சலித்து, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், வெண்ணை 
ரிப்பன் பகோடா
அல்லது நெய் (உருக்கி ஊற்றவும்), உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிரைச் சேர்த்து மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்தவுடன், முறுக்கு குழலில், ரிப்பன் பகோடா அச்சைப் போட்டு, பிசைந்த மாவை நிரப்பி, எண்ணையில் வட்டமாக பிழிந்து விடவும். 

இருபுறமும் திருப்பி விட்டு, பொன்னிறமாக வெந்தவுடன், எடுத்து வைக்கவும்.

கவனிக்க:
மிளகாய்த்தூளிற்குப் பதிலாக, மிளகுத்தூளையும் போடலாம். விருப்பமானால், ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளையும் சேர்க்கலாம்.

கடலைமாவு 2 கப்பும், அரிசி மாவு 1 கப்பும் சேர்த்தும் செய்யலாம், கடலை மாவிற்குப் பதில், பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.

அரிசி மாவு அதிகமாக சேர்க்கும் பொழுது, நல்ல மொரமொரப்பாக இருக்கும். வெண்ணை/நெய்க்கு பதில் ஒரு குழிக்கரண்டி சூடான எண்ணையை மாவில் சேர்த்தும் செய்யலாம்.
Tags: