ஆப்பிள் ரிங்ஸ் செய்முறை !





ஆப்பிள் ரிங்ஸ் செய்முறை !

ஆப்பிள் ரிங்ஸ் ஓர் அற்புதமான மாலை நேர ஸ்நாக்ஸ். இதனை தமிழில் ஆப்பிள் பஜ்ஜி என்று கூட அழைக்கலாம். இது வித்தியாசமான சுவையில், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
ஆப்பிள் ரிங்ஸ்
அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள்: 

ஆப்பிள் - 3-4

மைதா - 1 கப் 

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 

பட்டைத் தூள் - 1/4 டீஸ்பூன் 

பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் 

உப்பு - 1/4 டீஸ்பூன் 

முட்டை - 1 

மோர் - 1 கப் 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 

பொடித்த சர்க்கரை - 1/2 கப் 

பட்டைத் தூள் - 2 டீஸ்பூன் 

செய்முறை: 

முதலில் ஆப்பிளை வட்ட துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவே உள்ள பகுதியை நீக்கிவிட்டு, வளையங்களாக்கிக் கொண்டு, அதனை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து, அதில் உள்ள அதிகப்படியான ஈரத்தன்மையை நீக்க வேண்டும். 

பின் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் சோடா, சர்க்கரை, 1/4 டீஸ்பூன் பட்டைத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். 

அடுத்து மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து, பின் அதில் மோர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இந்த கலவையை மாவுடன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். 

எண்ணெய் சூடானதும், ஆப்பிள் துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். 

அடுத்து ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை மற்றும் பட்டைத் தூளை சேர்த்து கலந்து, அந்த கலவையில் பொரித்து வைத்துள்ளதைப் பிரட்டி எடுத்தால், ஆப்பிள் ரிங்ஸ் ரெடி!
Tags: