துவர்ப்புச் சுவையுடைய முடக்கத்தான் கீரை !





துவர்ப்புச் சுவையுடைய முடக்கத்தான் கீரை !

அதென்ன முடக்கத்தான் கீரையா? முடக்கறுத்தான் கீரையா? இரண்டுமே சரிதான். மூட்டுகளை காப்பதற்காக ஒரு உணவு இருக்கிறது என்றால், அது இந்த முடக்கத்தான் கீரை தான். 
முடக்கத்தான் கீரை
முடக்கு வாதத்தை நீக்கக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உள்ளதாம். அதாவது, முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால் இது முடக்கத்தான்கீரை என்ற பெயர் மருவி வந்து விட்டதாம். 

இந்த முடக்கத்தான் காய்கள் பலூன் போல இருக்கும். அதை அழுத்தினால் பட்டாசு போல சத்தம் வரும் என்பதால், இதை சிறுவர்கள் பட்டாசுக்காய் என்றும் சொல்வார்கள். 

இந்த கீரை கை, கால்களின் முடக்குவாதத்தை போக்கக்கூடியது.. 2 எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு பகுதியை வளர வைக்கும் தன்மை உடையது. 
சிலருக்கு 40 வயதுக்கு மேல், இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலையாகவும் இருக்கலாம். இந்தியாவில் 65 சதவிகித மக்களுக்கு இந்த மூட்டு வலி பாதிப்பு உள்ளது. 

இதற்கெல்லாம் சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரையாகும். மூட்டுவலி பிரச்சனை இருந்தால், தொடக்கத்திலேயே இந்த கீரையை எடுத்து கொண்டால், பூரண சுகமாகும்.

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. 

முடக்கத் தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன் படுத்தினால் சுவையாக இருக்கும். 

இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம். துவரம் பருப்பு, பாசிப்பருப்பு 
மற்றும் வேறு பருப்பு களுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக் கொள்ளலாம்.

முடக்கத் தான் கீரையில் வைட்டமின் களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
சிறு நீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் !
முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத் தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும். வாய்வுத் தொல்லை யுடையவர்கள் முடக்கத் தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக் கரண்டி போதும்.
Tags: