இரும்புச் சத்து நிறைந்த நெல்லிக்காய் !





இரும்புச் சத்து நிறைந்த நெல்லிக்காய் !

நெல்லிக்காய்கள் மனித குலத்துக்கே மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்ந்து வருகிறது. வைட்டமின் C, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளன. 
இரும்புச் சத்து நிறைந்த நெல்லிக்காய்
ஆனால், வைட்டமின் C சத்துக்கள் அதிகமாகவே உள்ளன.. நெல்லிக்காயில் 600 மில்லி அளவுக்கு வைட்டமின் C உள்ளதாம். நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுவது இந்த நெல்லிக்காய். 

தினம் ஒன்று சாப்பிட்டாலே போதும், எந்த நோயும் நம்மை அண்டாது.ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்? கடையில தேன் நெல்லிக்காய் -ன்னு கிடைக்குது, விலை அதிகம். 

உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங் களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப் பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல.
அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உதவியோட இந்த `வெல்லம் நெல்லிக்காய்' ரெசிப்பியை உருவாக்கி பல வருசங்களா தினமும் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுட்டு வர்றோம்.

சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக் காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க.

வேக வைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக் காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.

அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப் பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிற வங்களுக்கு.
இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க.

ரொம்ப காச்சணும்னு இல்ல. பிசு பிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக் காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும் நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்புறம், மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் இறங்கி யிருக்கிறதால அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே.
பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் !
ஆஸ்துமாவுக்கு நெல்லிக்காய் நல்ல மருந்து என்றே சொல்லலாம். நெல்லிச் சாற்றில் தேன் கலந்து தினமும் 2 முறை குடித்து வந்தால் ஆஸ்துமா நீங்கும். 

ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ள காய் என்பதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை துவக்கத்திலேயே விரட்டி விடும். 
ரத்த சோகை உள்ளவர்கள், உடனடியாக இந்த இரும்புச்சத்து நிறைந்த நெல்லிக்காயை சாப்பிட வேண்டும். ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே, தலைமுடி உதிர்வு இருக்காது. 

அதனால் தான் தலைமுடிக்கு தயாராகும் ஷாம்புகள், எண்ணெய்களில் இந்த நெல்லிக்காயை மூலப்பொருட்களாக அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
Tags: