கீரை வகைகள் | Types of spinach !

கீரை வகைகள் | Types of spinach !

வாய்ப் புண்ணையும், குடல் புண்ணையும் ஆற்றும் சக்தி மணத்தக்காளிக் கீரைக்கு உள்ளது. காசினிக் கீரையை சாப்பிட்டு வந்தால் ஈரல் வலுப்படும், ரத்தம் சுத்தப் படுத்தப்படும்.
கீரை வகைகள்
அரைக்கீரை அனைத்து வகை நோயாளி களுக்கும் ஏற்றது. மேலும் கண் பார்வை, ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து,
நெய் விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். பசளைக் கீரை ஆனது மலச் சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப் படுத்தும். குளிர்ச்சி தரும்.

வெந்தியக் கீரை வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறு சுறுப்பக்கும். அகத்திக் கீரை வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. கண் பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும்.

எல்லா கீரைகளிலும் உடலுக்கு ஏற்ற ஒரு குணம் உள்ளது. எனவே வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது கீரை சாப்பிடவும்.

உடம்பிற்குள் உள்ள சூட்டை தணிக்கக் கூடியதால் தான், இதற்கு அகத்திக்கீரை என்றே பெயர் வந்தது. ஒருபொருள் மலிவாக கிடைத்தாலே, அதற்கு பெரிதாக மனிதர்கள் மதிப்பு தருவதில்லை. 

அப்படிப்பட்டது தான் இந்த அகத்திக்கீரை. அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் நிறைந்த கீரை இது.. எல்லா காலத்திலும் வற்றாமல் கிடைக்க கூடியது. விலையோ குறைவானது. 
பிரசவித்த தாய்மார்களுக்கு, உடம்பில் சூடு சேர்ந்து விடும். அதே போல, கால்சியம், இரும்புச் சத்துக்களும் குறைந்து விடும். 

அதனால் தான், இந்த அகத்திக் கீரையை குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் சமைத்து தருவார்கள். எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதித் தன்மையை தரக்கூடியது.. தாய்ப்பால் பெருகும். 

முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும்.

முளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டுவதுடன் பசியையும் தூண்டுகிறது. முளைக்கீரையை நன்கு கழுவிச் சிறிது வெங்காயம், புளி, பச்சை  மிளகாய், உப்பு 

ஆகியவை சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உட்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய  நோய்கள் குணமாகும். 

அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும். முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிரங்கு முதலிய  நோய்கள் குணமாகின்றன. சொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். 
இந்த கீரையானது வெப்ப காய்ச்சலை தணிக்க வல்லது. முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை  சரியாகும். 

முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, அதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. 

முளைக் கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
Tags: