தேவையானவை :

கோழிக்கறித் துண்டுகள் (எலும்பு இல்லாதது) - 400 கிராம்

டார்க் ஸோயா ஸாஸ் (Dark Soya Sauce)- 1 மேஜைக் கரண்டி

மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

வறுகடலை - 1 மேஜைக் கரண்டி

நல்லெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 அங்குலம்

மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் (சிக்கன் ஸ்டாக்) - 6 கப்

நறுக்கிய லெமன் க்ராஸ் - 1 மேஜைக் கரண்டி

வேக வைத்த அரிசி - 50 கிராம்

சுத்தம் செய்து நறுக்கிய காளான் - 75 கிராம்

வெங்காயத்தாள் - 4

உப்பு -  தேவையான அளவு

கருவாடு எல்லாரும் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும்?

செய்முறை :

க்ளியர் சிக்கன் மஷ்ரூம் சூப் செய்வது எப்படி?

கோழிக்கறித் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயத் தாளை 2 அங்குல நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கேண்டீனில் நொறுக்கு தீனிகளை விற்க தடை - மத்திய அரசு !

அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

அதன்பின் இஞ்சி போட்டு வதக்கி, சிக்கன் ஸ்டாக் ஊற்றவும். அதன் பின் கோழிக்கறித் துண்டுகள், லெமன் க்ராஸ் போட்டு மூடி வேக வைக்கவும்.

கோழிக்கறி வெந்த பிறகு வேக வைத்த சாதம், காளான், வறுகடலை, டார்க் ஸோயா ஸாஸ், வெங்காயத்தாள், இவற்றைப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?

லெமன் க்ராஸை எடுத்து விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப் கிண்ணங்களில் ஊற்றி, பரிமாறவும்.