ரோஸ் மில்க் குச்சி ஐஸ் செய்யும் முறை !





ரோஸ் மில்க் குச்சி ஐஸ் செய்யும் முறை !

தேவையான பொருள்கள் :

பால் - 4 கப்

சீனி - 2 மேசைக்கரண்டி

ரோஸ் சிரப் - 4 மேசைக்கரண்டி

குச்சி ஐஸ் மோல்டு

செய்முறை :

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்.
ரோஸ் மில்க் குச்சி ஐஸ்
பால் ஆறியதும் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டவும். வடிகட்டிய பாலுடன் சீனி மற்றும் ரோஸ் சிரப் சேர்க்கவும்.

பிறகு கரண்டியால் நன்றாகக் கலந்து கொள்ளவும். குச்சி ஐஸ் மோல்டுகளில் ரோஸ் மில்க் கலவையை கவனமாக ஊற்றவும். 

மோல்டுகளை மூடி ஃப்ரீஸரில் 12 மணி நேரங்கள் வைத்து உறைய விடவும். பிறகு மோல்டுகளை வெளியே எடுத்து ஓடும் நீரில் நனைத்து குச்சியைப் பிடித்து மோல்டுகளிலிருந்து ஐஸைத் தனியாக எடுக்கவும்.

கோடைக் காலத்திற்கு ஏற்ற குழந்தை களுக்கு பிடித்தமான குளுகுளு குச்சி ஐஸ் தயார்.
Tags: