உடல்சூடு, செரிமாணம் நீக்கும் முருங்கை கீரை, அருகம்புல் !





உடல்சூடு, செரிமாணம் நீக்கும் முருங்கை கீரை, அருகம்புல் !

வயிறு வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரும் ஒரு சாதாரண நோய் தான்.
முருங்கை கீரை, அருகம்புல்
ஆனால் வயிற்று வலி அடிக்கடி வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். 
 
வயிற்று வலி எப்படி, ஏன் ஏற்படுகிறது? இதற்கான சிகிச்சை என்ன என்பதை பார்ப்போம். 

உடலில் உள்ள பல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் வயிற்று வலி ஏற்படுகிறது.
குறிப்பாக உடல் சூடு, செரிமாணம் ஆகாத உணவு சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக்குழாய் கற்கள், தொடர் கணைய அழற்சி, சிறுகுடல் சுருக்கம்,

பெருங்குடல் அழற்சி மற்றும் முன் சிறு குடலில் ஏற்படும் புண்ணும் (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும்.

உடலில் செரிமான அமைப்பில் கோளாறுகள் ஏற்படும் போதும் வரும் எரிச்சலூட்டும் குடல் நோய் மற்றும் வாயுத் தொல்லையால்

வயிற்று வலி ஏற்படுகிறது. அடிவயிறு சரியாக வேலை செய்யவில்லை என்றால் வயிற்று வலி வரும்.
மலம் கழிப்பது முறையாக நடக்கா மலிருத்தல், மலச்சிக்கல் மற்றும் வாயு உருவாதல் ஆகியவற்றால் வலி உண்டாகும். வயிற்று வலியை 3 வகைகளாக பிரிக்கலாம்.

தீவிரமான வயிற்றுவலி, மந்தமான வயிற்று வலி, வகைப்படுத்த முடியாத வயிற்று வலி.
உங்கள் தங்க நகைகள் தொலைந்து போகாமல் இருக்க !
வாந்தி, குமட்டல்: 

வயிற்று வலியோடு குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், வயிற்றுப் பொருமல், ஏப்பம், எடை குறைதல், காமாலை போன்றவை ஏற்படும்.

நீண்ட காலம் தொடர்ந்து வாந்தி, குமட்டல் இருந்தால் அல்சரால் இரைப்பை குடல் சுருக்கம், குடல் முருக்கம்,

வீக்கம், வயிற்றில் கட்டி, முன்குடல் திசுச்சிதைவு, இரப்பை அல்லது கணையப் புற்று ஆகியவை இருக்கக் கூடும்.
வயிற்றுப் போக்கு: 

வயிற்று வலியுடன் வயிற்றுப் போக்கும் இருந்தால் கணையம், சிறுகுடல், பெருங்குடல் பகுதிகளில் கோளாறுகள் இருக்கும்.

மலச்சிக்கல் இருந்தால் குடல் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் இருக்கும்.
விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாதது?
பசியின்மை: 

வயிற்று வலியோடு, பசியின்மையும் எடை குறைவும் இருந்தால் டி.பி (அ) வயிற்றுப்பகுதியில் கட்டியிருக்க வாய்ப்புண்டு.

வயிறு உப்புசம், வாயு பிரிவது, அஜீரணக் கோளாறு போன்றவையும், கல்லீரல், பித்தநாளம் மற்றும் முன் குடலில் ஏதேனும் பிரச்னை இருந்தால் காமாலை ஏற்படும்.
Tags: