வாழைப்பூ போண்டா செய்முறை / Valaippu dumplings ! வாழைப்பூ போண்டா செய்முறை / Valaippu dumplings ! - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

வாழைப்பூ போண்டா செய்முறை / Valaippu dumplings !

வாழைப்பூ இரத்தமூலம், வெள்ளை, பயித்தியம், கபாதிக்கம், உதிரக்கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல், பிரமேகம் இவைகளை நீக்கும்... சுக்கில விருத்தியைத் தரும். 
வாழைப்பூ போண்டா
உணவாகவும் மருந்தாகவும்: இதைப் பொரியலாகவோ அல்லது துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகவோ செய்து சாப்பிட்டால் உஷ்ணபேதி, இரத்தமூலம், சீதபேதி இவை போகும்.

தேவையான பொருள்கள் :

உளுந்து - கால் கிலோ

வாழைப்பூ - ஒன்று (நடுத்தரமான அளவு)

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப

கறிவேப்பிலை - ஓரு கொத்து

தேங்காய்ப்பூ - அரை கப்

மிளகு - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
வாழைப்பூ போண்டா
உளுந்தை ஊற வைத்து நைசாக அரைக்கவும். தேங்காயுடன் மிளகு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப் பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
கொழுப்புக் கட்டியால் பிரச்சனை வருமா?
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பி லையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உளுந்து மாவுடன் அரைத்த தேங்காய், வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை, மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை போண்டாக் களாக உருட்டி போட்டு பொரித் தெடுக்கவும்.

சுவையான வாழைப்பூ போண்டா தயார். சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.