ஸ்டஃப்டு டொமேட்டோ செய்வது எப்படி?





ஸ்டஃப்டு டொமேட்டோ செய்வது எப்படி?

ரத்தச் சிவப்பு நிறத்தில் உள்ள தக்காளியை ஸ்நாக்ஸ் போல பச்சையாகவே சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. சமையலில் அது கொடுக்கும் மனமும், புளிப்புச் சுவையும் அலாதியானது. 
ஸ்டஃப்டு டொமேட்டோ
அது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக்களும் தக்காளியில் நிரம்பியுள்ளன. இத்தகைய தக்காளியை தினசரி சாப்பிடுவதால் அல்லது அளவுக்கு மிகுதியாக எடுத்துக் கொள்வதால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து கவனிக்க வேண்டியுள்ளது. 

இது குறித்து ஹைதராபாதைச் சேர்ந்த மூத்த மருத்துவர் சோம்நாத் குப்தா கூறுகையில், தக்காளியில் விட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன.
தக்காளியில் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. அதேபோல பொட்டாசியம் சத்தும் உள்ளது. விட்டமின் சி சத்தானது சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக அமைகிறது. 

விட்டமின் கே சத்தானது ரத்தத்தை உறைய வைப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். பொட்டாசியம் சத்தானது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

தக்காளியில் நிறைவான நீர்ச்சத்தும், குறைவான கலோரியும் இருப்பதால் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும். 

அது மட்டுமல்லாமல், தக்காளியில் உள்ள நார்ச்சத்து, வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் பசி கட்டுப்படுத்தப் படுகிறது. நம் உணவில் ஒரு அத்தியாவசிய பொருளாக இருப்பது தக்காளி. 

ஆனால் அதையே சைட் டிஷ் ஆக உட்கொள்வதில் ஒரு தனி சுவை உண்டு. இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டஃப்டு டொமேட்டோவை ட்ரை பண்ணி பாருங்க… மிக சுவையான சைட் டிஷ் இது.
தேவையானவை: 

ஆப்பிள் தக்காளி – 4 

இஞ்சி – ஒரு பெரிய துண்டு 

ஓமம் – ஒரு ஸ்பூன் 

மல்லித்தழை – ஒரு கைப்பிடி 

மிளகு சீரகத் தூள் – தலா ஒரு ஸ்பூன் 

எண்ணெய் – தேவையான அளவு 
செய்யாத தவறுக்காக 23 வருடம் தண்டனை அனுபவித்த 5 இஸ்லாமிய இளைஞர்கள் - நடுங்க வைக்கும் கதை !
செய்முறை: 
ஆப்பிள் தக்காளியை நான்காக வகுந்து கீறிக் கொள்ள வேண்டும். தக்காளி பிளந்து விட கூடாது. நான்கு பாகமும் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். 

இஞ்சி, ஓமம், மல்லித்தழை, மிளகு மற்றும் சீரகம் எல்லாவற்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு தக்காளிக்குள்ளும் அரைத்த மசாலாவை நிரப்பவும் (ஸ்டஃப் செய்யவும்). 

நிரப்பப்பட்ட தக்காளிகளை வாணலியில் போட்டு எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுக்கவும். சூடாக சாப்பிட உகந்த மிகமிக சுவையான சைட் டிஷ் இது.
Tags: