புட்டு செய்முறை / Puttu Recipe !





புட்டு செய்முறை / Puttu Recipe !

நம் பலரின் வீட்டில் எளிதில் தயாரிக்க முடிந்த உணவு. இதனுடன் கடலை கறியும் சேர்த்து உண்டால் அதன் சுவையே தனி தான்!

புட்டு
இவை இரண்டை யும் தயாரி க்கும் முறையை இங்கே காண்போம்.

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி – 500 கிராம் 

தேங்காய் – 1 

உப்பு – சுவைக்கேற்ப 

செய்முறை: 

பச்சரிசியை ஊற  வைத்து நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும். அதை லேசாக வாணலி யில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஆற வைத்து, அதில் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பொல பொல வென்று கிளற வேண்டும்.

பின்னர் புட்டு குழாயில் ஒரு கரண்டி மாவு அதன் மேல் துருவிய தேங்காய், பிறகு மீண்டும் மாவு,
அதன் மேல் தேங்காய் இப்படியே குழாய் முழுவதும் வைத்து ஆவியில் அவிக்க வேண்டும். 

எளிமை யான இந்த உணவு அவிக்கப் படுவதால் சத்தாகவும், சுவை யாக இருக்கும். 

இதில் சர்க்கரை சேர்த்து சாப்பிட லாம். வேக வைத்த பாசிப் பயிறு மற்றும் பப்படம் ஆகிய வற்றை சேர்த்து சாப்பிட லாம்.

இனிப்பு விரும்புப வர்கள் மாவை கிளறும் போதே சர்க்கரை சேர்த்தும் செய்ய லாம்.
Tags: