வாழைப்பழ ஐஸ்கிரீம் செய்வது | Banana ice cream





வாழைப்பழ ஐஸ்கிரீம் செய்வது | Banana ice cream

தேவையான பொருட்கள்: 

பால் - 1/3

கோப்பை முட்டை - 2

கிரீம் - 1 கோப்பை

சர்க்கரை - 1/2 கோப்பை

பழுத்த வாழைப்பழங்கள் - 1 கோப்பை மசித்தது

வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு- 2 தேக்கரண்டி

உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:
வாழைப்பழ ஐஸ்கிரீம்
முதலில் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவை பிரித்துக் கொள்ளவும். சூடான தண்ணீரின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முட்டை மஞ்சள்கரு, சர்க்கரை இரண்டையும் சேர்த்து சற்றே கெட்டியாக மஞ்சள் நிறமாகும் வரை அடிக்கவும்.

அதில் பால், உப்பு, வாழைப்பழ மசியல், எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனை குளிர்ப் படுத்தவும். இதில் முட்டை வெள்ளை க்கரு, வெண்ணிலா எஸ்ஸென்ஸ், மற்றும் கிரீம் சேர்த்து கலக்கவும்.

இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி குளிர் பதனப் பெட்டியின் உறையும் அறைகளில் வைத்து அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.
Tags: