மேங்கோ சார்பெட் செய்வது | Manga carpet !





மேங்கோ சார்பெட் செய்வது | Manga carpet !

தேவையான பொருட்கள்: 

(2 ஸ்கூப் செய்வதற்கு)...

மாம்பழம் - 1,

சர்க்கரை - 1/4 கப்,

தண்ணீர் - 1/4 கப்,

எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நீண்ட நேரம் கொதிக்க வைக்கத் தேவை யில்லை. சர்க்கரை முழுவதும் கரையும் வரை கலக்கவும். சர்க்கரைக் கலவையை ஆறவிடவும்.
மேங்கோ சார்பெட் செய்வது
மாம்பழத்தி லிருந்து சதைப் பகுதியை மட்டும் தனியே அரை கப் அளவுக்கு எடுக்கவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் போட்டு 1 நிமிடம் அரைக்கவும்.

இந்த மாம்பழ பல்ப்பை சர்க்கரை பாகில் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் நன்கு அரைக்கவும். இறுக்கமான மூடி கொண்ட ஃப்ரீசரில் பாதுகாப்பான டப்பாவில் அதை ஊற்றி, குறைந்தது 6 மணி நேரம் உறைய வைக்கவும்.

மேலும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்திருந்து எடுத்து, ஒரு முள் கரண்டியால் கிளறவும். ஓரங்களை நன்கு சுரண்டி விடவும். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒரு முறையும் கிளறவும்.

நன்கு உறைந்த தும், ஸ்கூப் செய்து உடனே பரிமாறவும்.ஆறு மணி நேரத்தில் மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்தும் ஃப்ரீசரில் வைக்கலாம்.
Tags: