சுவையான ஆரஞ்சு ஜூஸ் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

சுவையான ஆரஞ்சு ஜூஸ் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
சுவையான ஆரஞ்சு ஜூஸ் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
ஆரஞ்சு பழத்தில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியினை  அதிகரிக்கும்.

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல்  பாதுகாக்க உதவும்.
ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக அளவு நார்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது.

எனவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க தினமும் ஆரஞ்சு பழத்தினை உண்டு வாருங்கள். சரி இனி ஆரஞ்சு பழம் கொண்டு சுவையான ஆரஞ்சு ஜூஸ் ஐஸ்கிரீம் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள்: 

கமலா ஆரஞ்சு சாறு - ஒன்றரை கப்,

கன்டென்ஸ்டு மில்க் - முக்கால் டின்,

கிரீம் - ஒன்றரை கப்,

சர்க்கரை - அரை கப்,

ஆரஞ்சு சுளைகள் மற்றும் செர்ரி - அலங்கரிக்க.

உங்கள் காம உணர்வை கட்டுப்படுத்துவது எப்படி?

செய்முறை:
சுவையான ஆரஞ்சு ஜூஸ் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
கமலா ஆரஞ்சு சாற்றில், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பிறகு கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மீண்டும் கலக்கவும். 

பிறகு கிரீம் சேர்த்து, அது வெண்ணெயாகா தபடி கலக்கவும். பிறகு கலவையை மூடி போட்ட ஐஸ்கிரீம் பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரீசரில் வைக்கவும். 

அது பாதி கெட்டியாகும் வரை வைத்திருந்து, வெளியே எடுத்து மீண்டும் ஒரு முறை அடித்துக் கலக்கி, மறுபடி ஃப்ரீசரில் வைக்கவும்.

உங்கள் தொப்புள் பற்றி அறிந்திராத தகவல் தெரிந்து கொள்ள?

முழுவதும் கெட்டியானதும் எடுத்து, ஆரஞ்சு சுளைகள் மற்றும் செர்ரி கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

இதே முறையில் மாம்பழம், சீத்தாப்பழம், வாழைப்பழம், அன்னாசி, மிக்சட் பழங்கள் என விதம் விதமாக ஐஸ்கிரீம் செய்யலாம்.
Tags: