டேஸ்டியான செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி செய்வது எப்படி?

டேஸ்டியான செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி செய்வது எப்படி?

நண்டுவில் நிறைய செலீனியம் உள்ளது. நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இந்த செலீனியம் சத்துக்கள் உதவுகின்றன. 
டேஸ்டியான செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி செய்வது எப்படி?
செலீனியம், தைராய்டு சுரப்பிகளின் ஆக்சிஜனேற்ற சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இதன்மூலம் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கும் தூண்டுகோலாகிறது. 
கழுத்தில் உள்ள சவ்வும், எலும்பும் தேய்வதும் அறிகுறியும் !
கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கு அருமருந்தாகிறது. முடக்கு வாதத்தையும் இந்த நண்டுகள் தடுக்கின்றன. ரத்த சுத்திகரிப்புக்கு பேருதவி புரிகிறது. 

நண்டில் குரோமியம் நிறைய உள்ளதால், ரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு ஆகியவற்றை குறைக்கவும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் அளவை சீராக பராமரிக்கவும் இந்த கடல்வாழ் உயிரினம் உதவுகிறது. 

சரி இனி நண்டு பயன்படுத்தி டேஸ்டியான செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை : 

நண்டு – 1 கிலோ

எண்ணெய் – 100 மில்லி

இஞ்சி பூண்டு – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – அரை ஸ்பூன்

 வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 200 கிராம்

மிளகாய் வற்றல் – 4

மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்

மிளகு – 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

மல்லி – 2 டீஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 4 (விருப்பப்பட்டால்)

பச்சை மிளகாய் – 2 – 4

 உப்பு – தேவைக்கு

கறிவேப்பிலை – 2 இணுக்கு

மல்லி இலை – ஒரு கைப்பிடியளவு.
டோனியை பின்னால் இறக்கியது ஏன்? - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி !
செய்முறை: 
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து கொதி வந்ததும் தண்ணீரை வடிகட்டி விடவும்.

டேஸ்டியான செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி செய்வது எப்படி?

(இப்படி செய்வதின் மூலம் அதிகம் கவுச்சி வாடை இருக்காது, பாதி வெந்தும் விடும். சாப்பிடும் போது சாஃப்டாக இருக்கும்.) வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் காயவைத்து வற்றல், கறிவேப்பிலை போடவும். வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி சிம்மில் வைக்கவும்.

மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக வறுத்து கொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு தூள் செய்து அத்துடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
வாணலியில் வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்து வந்தவுடன் நண்டை சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். உப்பு பார்த்து சேர்க்கவும், கொஞ்சம் கூடினாலும் கடுத்து விடும்.
பின்பு அத்துடன் அரைத்தமசாலா, தேங்காய் கலவை சேர்த்து 15 நிமிடம் வைத்து தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் தெளிந்து கெட்டியான வுடன் இறக்கவும்.
Tags: