வீட்டிலேயே பிளாக் ஹென்னா செய்வது எப்படி?





வீட்டிலேயே பிளாக் ஹென்னா செய்வது எப்படி?

0
இன்றைய இளைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் மிகப் பெரிய பிரச்னை நரை. காரணம் கெமிக்கல் கலந்த ஹேர் டை, கலரிங், ஷாம்பூ என இஷ்டத்துக்குப் பயன்படுத்தி, தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.
வீட்டிலேயே பிளாக் ஹென்னா
இயற்கையான முறையில் மருதாணி அரைத்துப் பூசினால், அது சிவப்பாகத் தெரியும் எனப் பெரும்பாலோனோர் விரும்ப மாட்டார்கள். 

ப்ளாக் ஹென்னாவை தயாரித்துப் பயன்படுத்தினால் இயற்கையான கூந்தலை போலவே உங்களது கூந்தல் அலை பாயும். எந்தப் பக்க விளைவும் இருக்காது. வீட்டிலே செய்வதும் எளிது. இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை:  

ஹென்னா  ஒரு கப்,

சூடான பிளாக் காபி   பேஸ்ட்டாக மாற்றுவ தற்குத் தேவையான அளவு,

எலுமிச்சைச் சாறு  ஒரு பழம்,

ஆப்பிள் சிடர் வினிகர்  2 ஸ்பூன், 

முட்டை மஞ்சள் கரு  1 (விரும்பினால்)

ப்ளைன் யோகர்ட்  2 அல்லது 4 ஸ்பூன்

இண்டிகோ (அவுரிப் பொடி அல்லது அவுரி இலை)  சிறிதளவு

செய்முறை:
பிளாக் ஹென்னா செய்வது
ஹென்னா பொடியுடன், சூடான பிளாக் காபி கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். பிறகு எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து, 6 மணி நேரம் ஊற வையுங்கள்.
மாரத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி ! 
எப்போது பயன்படுத்து கிறீர்களோ, அதற்கு முன் முட்டையின் மஞ்சள் கரு, யோகர்டையும் ஹென்னாவில் கலந்து கூந்தலில் பூசுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசி நன்கு உலர்த்துங்கள்.
உங்கள் மார்பகம் மென்மையாக பளபளக்க !
இண்டிகோவை வெந்நீரில் காய்ச்சி அதைத் திக்கான பேஸ்ட்டாக மாற்றி, அதைக் கூந்தலில் பூசுங்கள். மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து, கூந்தலை அலசுங்கள். கருகரு கூந்தல், மென்மை யாகவும், அழகாகவும் இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)