சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?





சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?

காரைக்குடி என்றாலே நம் கண்முன் வந்து நிற்பது செட்டிநாடு சமையல் தான். நாம் எவ்வளோ பெரிய ஃபைவ் ஸ்டார் உணவகங்களில் சென்று சாப்பிட்டாலும், செட்டிநாட்டு சமையலுக்கு ஈடாகாது.
சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?
அதனாலேயே செட்டி நாடு சமையல் உலகளவில் பெயர் பெற்று நாடெங்கும் செட்டிநாடு ரெஸ்டாரெண்ட்கள் முளைத்து விட்டன. 

அவ்வளவு புகழ்பெற்ற உணவுகளை நம் வீடுகளிலும் சமைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 
அவர்களுக்காகவே சுவையான செட்டிநாட்டு சிக்கன் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

கோழி -1 கிலோ

வெங்காயம்- 3

தக்காளி -3 இஞ்சி

பூண்டு விழுது - 2 மேசைகரண்டி

பச்சை மிளகாய் - 2

கல்பாசி - 4

கறிவேப்பில்லை - 1 கொத்து

கொத்த மல்லி தலை - ஒரு கைப்பிடி

லெமன் ஜூஸ் - 4 மேசை கரண்டி

மஞ்சள் தூள் - 1 மேசை கரண்டி

எண்ணெய் - 4 மேசைகரண்டி
தேங்காய் எண்ணெய் பயன்கள் மற்றும் கலப்படம் !
உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: 

தனியா - 7 மேசைகரண்டி

சீரகம் - 1/2 மேசைகரண்டி

சோம்பு - 1 மேசைகரண்டி

மிளகு - 2 மேசை கரண்டி

கசகசா - 2 மேசைகரண்டி

பட்டை - 3 துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் - 4

ஜாதிபூ - 4

அன்னாசி பூ - 1

வரமிளகாய் - 10

தேங்காய் - 2 மேசைகரண்டி

பொட்டுகடலை - 1 மேசைகரண்டி

பெண்களின் உடலுக்கு வலு சேர்க்கும் கொள்ளு கேரட் துவையல் செய்வது எப்படி?

செய்முறை: 
சுவையான செட்டிநாடு கோழி குழம்பு செய்வது எப்படி?
மேற்குறிய அனைத்தையும் எண்ணெய் விடாமல் தனி தனியாக வாசனை வரும் வரை வறுத்து பொடித்து கொள்ளவும்.
கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், லெமன் ஜூஸ் சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் வைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கல் பாசி, பிரியாணி தலை போட்டு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும் .நன்கு வாசனை வரும் வரை வதக்கவும். இப்போது தக்காளி சேர்க்கவும்.

2 நிமிடம் கழித்து சிக்கனை போட்டு அரைத்த மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அனைத்து மசாலா பொருட்களும் சிக்கன் உடன் சேர்ந்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு தண்ணீர் 1 கப் அல்லது தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.
அடுப்பை சிறிது குறைத்து வைக்கவும் . சிக்கன் நன்கு வெந்து மசாலா கெட்டியானதும் கருவேப்பிலை, கொத்த மல்லி தலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: 

பிரியாணி, இட்லி, கல்தோசை, சாப்பாத்தி, பரோட்டா,சாதம், அனைத்துட னும் சாப்பிட காரசாரமாக , சுவையாக இருக்கும்.
Tags: