மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி?





மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி?

மருத்துவ மூலிகையாக கருதக்கூடிய கீரை வகைகளில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. 
மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி?
மணத்தக்காளி கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. 

மணத்தக்காளி செடியின் இலைகள் சிலவற்றை பறித்து, அந்த இலைகளை நன்றாக கசக்கி சாறு எடுத்து, 

அந்த சாற்றை காய்ச்சலை போக்க நெற்றியிலும், கை கால்களில் ஏற்படும் வலியை போக்க கை, கால்களிலும் நன்கு தேய்த்து வந்தால் குணம் கிடைக்கும்.
இத்தகைய சத்துமிக்க கீரையை வைத்து மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
நன்கு சுத்தம் செய்து நறுக்கிய கிரை = ஒரு கப்

பாசிப்பருப்பு = 50 கிராம்

மிளகாய் வற்றல் = 2

உளுத்தம் பருப்பு = 1 டீஸ்பூன்

கடுகு = 1 ஸ்பூன்

பெருங்காயத் தூள் = 1 ஸ்பூன்

சர்க்கரை = 1 சிட்டிகை

உப்பு தேவைக்கேற்ப = 1 ,1/2 ஸ்பூன்

எண்ணெய் = 2 ஸ்பூன்
செய்முறை:-  

மணத்தக்காளி கீரை பொரியல்
பாசிப்பருப்பை நன்கு களைந்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு வேக விட வேண்டும். பருப்பு சற்று வெந்ததும் (குழைந்து விட கூடாது) அதில் நறுக்கி வைத்துள்ள கீரையை போட்டு வேக வைக்க வேண்டும்.
உப்பையும் போட்டு விட வேண்டும். தண்ணீர் வற்றி பரும்பும் கீரையும் ஒன்றாக வரும் சமயம் அடுப்பை நிறுத்தி விட வேண்டும்.

பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றலை தாளித்து, சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.  சாம்பார், ரசம் சாதத்துடன் இந்த பொரியல் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
Tags: