முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி?





முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி?

முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. 
முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி?
இதன் அர்த்தம் என்ன வென்றால் நாம் உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக மென்று நொறுங்க தின்றாலும், 
மேலும் முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்பதும் உண்மையாகும்.

முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் ஆகிய எல்லாப் பாகங்களும் மிகச்சிறந்த அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள் ஆகும்.

சரி இனி முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:

முருங்கைக்கீரை- 4 டம்ளர்

பயத்தம்பருப்பு- 1 கப்

பெருங்காயம்- சிறிதளவு

தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

மிளகாய்வற்றல்- 1
செய்முறை:

1. முருங்கை கீரையை ஆய்ந்து மண் போக அலசி ஒரு நீர் உறிஞ்சும் காகிதத்தால் துடைத்து வைக்கவும்.
முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி?
2. குக்கரில் பாசிப்பருப்பை விசில் வரும் முன்பே உதிரியாய் சுண்டலுக்கு வேக வைப்பது போல வேக வைத்து எடுத்து வைக்கவும் 

(பாசிப் பருப்பு விரைவில் குழைந்து வெந்தும் விடும், அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்க ளுக்குள் எடுத்து விட வேண்டும்)
3. மைக்ரோ வேவ் உள்ளவர்கள் பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் குறைவான நீர் விட்டு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கலாம்.

4. தாளிசப் பொருட்களைத் தாளிசம் செய்து கொண்டு முருங்கை கீரையைப் போட்டு உப்பு சேர்த்து (தண்ணீர் விடத் தேவை யில்லை) நன்றாக வதக்கவும்.

கீரை வகைகள் செய்யும் போது கணிசமாகத் தோன்றும் கீரை வெந்ததும் குறைவாக இருக்கும், எனவே உப்பு மிகவும் குறைவாகப் போட வேண்டும்.
5. தனியே ஒரு வாணலியில் பாசிப் பருப்பை வதக்கி உதிராக்கவும். உப்பு சேர்க்கவும்.

6. முருங்கைக் கீரை வெந்த பிறகு பாசிப்பருப்பு சுண்டலை அதனுடன் சேர்த்து வதக்கி தேங்காய் துருவலைப் போட்டு இறக்கவும்.
7. சாம்பார், வத்தக் குழம்பும், மோர்க் குழம்பு, ரசம், தயிர் சாதம் போன்ற வற்றிற்கு அசத்தலான பொரியலாக முருங்கை கீரை பொரியல் அமையும்.

முருங்கைக் கீரையைப் பொரியலாக மட்டு மில்லாமல் சாம்பார், கூட்டு, தால், வடை, அடை போன்ற பல வகைகளில் சமைத்துப் பயன்படுத்திப் பலன் பெறலாம், பலம் பெறலாம்.
Tags: