தேவையானவை:
சோளம் (கார்ன்) - 1/4 கிண்ணம்

கோதுமை மாவு - 1/2 கிண்ணம்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1/2 தேக்கரண்டி

காரப்பொடி - 1/2 தேக்கரண்டி

கொத்த மல்லி - சிறிதளவு
  
கார்ன் பரோத்தா ரெசிபி செய்வது எப்படி?
செய்முறை:
1. சோளம், பச்ச மிளகாய், சீரகத்தை நீர் அதிகம் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

2. கோதுமை மாவுடன், அரைத்த கலவையைப் போட்டு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, காரப்பொடி, எண்ணெயைச் சேர்த்துப் பிசைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

3. பிறகு சப்பாத்திக் கல்லில் இட்டு கார்ன் சப்பாத்தி களாகச் செய்தெடுக்கவும்.
இன்னொரு முறை:
1. இம்முறையில் அரைத்த சோளக் கலவையை எண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கிய கீரையையும் சேர்த்துக் கெட்டி யாக்கவும்.

2. கோதுமை மாவு தனியே பிசைந்து கொள்ளவும்.

3. சோளம் பூரணத்தை உள்ளே வைத்து பரோத்தாக் களாகச் செய்யவும்.