சுவையான மணத்தக்காளி சாதம் செய்வது எப்படி?





சுவையான மணத்தக்காளி சாதம் செய்வது எப்படி?

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு மிகசிறந்த மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.
சுவையான மணத்தக்காளி சாதம் செய்வது எப்படி?
மேடை பேச்சாளர்களும், பாடகர்களும், இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொண்டைக் கட்டிக் கொள்ளும் என்ற பிரச்சனை வராது.

உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில் பன்படுகிறது. நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பி விடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப் பொருள்களை நன்கு செரிமானம் செய்து விடும் தன்மை கொண்டது.

உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் உடல் சூடு தனியும்.மருத்துவ மூலிகையாக கருதக்கூடிய கீரை வகைகளில் ஒன்று மணத்தக்காளி கீரை. 

குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. 

மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.
மணத்தக்காளி செடியின் இலைகளை தண்ணீரில் வேக வைத்து அருந்தி வர கல்லீரல் நோய்கள் சீக்கிரம் நீங்குவதற்கு துணைபுரியும். சரி இனி மணத்தக்காளி கீரை கொண்டு சுவையான மணத்தக்காளி சாதம் செய்வது எப்படி?  என்று பார்ப்போம்.

தேவையான பொருள் : 
நன்கு சுத்தம் செய்யப்பட்டு நறுக்கிய கீரை - ஒரு கப் 

பச்சை மிளகாய் - 3 

புளி = ஒரு பாக்கு அளவு 

உப்பு - தேவைக்கேற்ப 

கரமசாலா தூள் - 1/4 ஸ்பூன் 

தனியா தூள் - 1 ஸ்பூன் 

தாளிக்க 

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 

கடுகு - 1/2 ஸ்பூன் 

முந்திரி பருப்பு - 2 டீஸ் பூன் 

எண்ணெய் - 1 குழிக்கரண்டி 

செய்முறை:- 
கீரை, புளி பச்சை மிளகாய், உப்பு எல்லா வற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம் பரும்பு, முந்திரியை தாளித்து, தனியா, கரம்மசாலா, அரைத்த விழுது எல்லா வற்றையும் போட்டு எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும். 

எப்போது பால் குடிக்கலாம் காலையா? இரவா?

நன்றாக உதிர்த்த சூடான சாதத்தில் இந்த விழுதை கலந்து பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.
Tags: