பீட்ரூட் கீரை மசியல் செய்வது எப்படி?





பீட்ரூட் கீரை மசியல் செய்வது எப்படி?

கிழங்கு வகைகளிலிருந்து கிடைக்கின்ற கீரைகளில் பீட்ரூட் கீரையும் ஒன்று. கிழங்கை போலவே பீட்ரூட்டின் இலையையையும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். 
பீட்ரூட் கீரை மசியல் செய்வது எப்படி?
பொதுவாக பீட்ரூட் கிழங்கை நாம் உணவில் சேர்த்துக் கொள்கின்ற அளவு பீட்ரூட் கீரையைச் சேர்த்துக் கொள்வதில்லை. ஐரோப்பியர்கள் இக் கீரையை மிக விரும்பி தங்கள் உணவோடு சேர்த்துக் கொள்ளுகின்றனர். 
பீட்ரூட் கீரையை வீணடிக்காமல் உணவோடு சேர்த்துக் கொள்வது நல்லது. பீட்ரூட் கீரையில் கரோட்டின் என்னும் உயிர்ச்சத்து மிகுதியாய் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. 

இந்தக் கீரையை வைட்டமின் ஏ – யின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். தளிர் இலைகளைக் கீரை உணவாகப் பயன்படுத்தலாம். சரி இனி பீட்ரூட் கீரை கொண்டு பீட்ரூட் கீரை மசியல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை:

பீட்ரூட் கீரை - 4 செடிகளின் இலைகள் (நான் செய்தது)

சின்ன வெங்காயம் - 7

தக்காளி - பாதி

பச்சை மிளகாய் - 1

புளி - சிறு கோலி அளவு

பூண்டிதழ் - 7 எண்ணிக்கை

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்

கடுகு

உளுந்து

மிளகு - 2

சீரகம்

காய்ந்த மிளகாய் - 1

பெருங்காயம்

ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !

செய்முறை:

பீட்ரூட் கீரை மசியல்
முற்றிய, பூச்சி இலை களை நீக்கி விட்டு, மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடிய வைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பி லேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்து விட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கிண்ண த்தில் எடுத்து வைக்கவும்.

அதே வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புளி, கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி இறக்கவும்.

தாளித்தது, வதக்கியது இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸி யில் போட்டு மசித்து எடுக்கவும்.தண்ணீர் சேர்க்கத் தேவை யில்லை. இப்போது சுவையான, சிறிது பிங்க் நிறத்தி னாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.
இது சாதத் துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். துவையல் போலவும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
Tags: