பச்சை மஞ்சள் கோழி வறுவல் செய்வது எப்படி?

பச்சை மஞ்சள் கோழி வறுவல் செய்வது எப்படி?

நகரம் ஆகட்டும் கிராமம் ஆகட்டும் இன்றைய மகளிர், வீடுகளில் அசைவ உணவு மசாலாவும் எண்ணையும் அதிகமாக கலந்து சமைக்கிறார்கள்.
பச்சை மஞ்சள் கோழி வறுவல்
அப்படி சமைத்தால் தான் சுவை மிகுதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பழைய கால அதாவது நம் முன்னோர்கள் காலத்து சமையலைப் பற்றி தெரிந்து கொள்வதில்லை.

முன்னோர்களின் நாட்டு வைத்தியம் போல் நம் முன்னோர் காலத்து உணவு தயாரிக்கும் முறையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் வயிற்றில் கோளாறு ஏற்படுத்தாத தாகவும் இருந்தது.

நாட்டுக் கோழிக்கு என்று தனி சுவை உண்டு. சரி இனி ஆட்டு மூளை பயன்படுத்தி டேஸ்டியான பச்சை மஞ்சள் கோழி வறுவல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை . : 

இரண்டு மூன்று பேர் சாப்பிடும் அளவுக்கு நாட்டுக் கோழி கால் கிலோ,

தேவையான அளவு உப்பு,

மூன்று மேசைக் கரண்டி எண்ணை,

கடுகு, பச்சை மஞ்சள் துண்டு ஒன்று (தூள் அல்ல),

மிளகு, சீரகம். இவை தான் அந்தக் கால கோழி வறுவலுக்குத் தேவையான பொருட்கள்.

செய்முறை: 

முதலில் கோழியை அவித்து வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் துண்டையும் மிளகையும் சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கூழ் போல அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
ஆண்மையை அதிகரிக்க உதவும் ஆட்டு மூளை ! 
விறகு அடுப்பில் சிறிய மண் சட்டியை வைத்து முதலில் எண்ணை ஊற்றி (தேங்காய் எண்ணை சேர்த்தால் நன்று) கடுகு, சீரகம் இரண்டையும் போட்டு சிறிது வதக்கி விட வேண்டும்

கருவேப்பிலை தேவையாய் இருந்தால் சேர்க்கலாம். பின்பு ஏற்கனவே வேக வைத்த நாட்டுக் கோழியை எடுத்து சட்டியில் போட்டு சிறிது நேரம் எண்ணையில் வதக்க வேண்டும். 
பிறகு அரைத்து வைத்த மஞ்சள் மிளகு கலவையை கோழியுடன் சேர்த்து பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கழித்து எடுத்து சாப்பிடலாம். எவ்வளவு விரைவாக கோழி வறுவல் சமையல் முடிகிறது பாருங்கள்.

சாப்பிடும் போது இந்த சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் மசாலாக் களை போல் நம் வயிற்றுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
Tags: