கொண்டைக்கடலை சுண்டல் செய்வது எப்படி?





கொண்டைக்கடலை சுண்டல் செய்வது எப்படி?

5 minute read
கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 
கொண்டைக்கடலை சுண்டல் செய்வது எப்படி?
இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. 

மேலும் இதில் கரையும்  நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி  செய்கிறது.  
ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும். கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோ போரோசிஸ்  போன்றவற்றை எதிர்த்துப் போராடும். 

மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும். இரத்த சோகை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. 

இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்  கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம்.
தேவையானவை:

ஊற வைத்தக் கொண்டக்கடலை-  2 டம்ளர்

சாம்பார் தூள்- 1 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி

மிளகாய்வற்றல் – 1

பச்சைமிளகாய்- 1

இஞ்சி – 1 துண்டு

கறிவேப்பிலை- 1 இணுக்கு

காயம்- சிறிதளவு

செய்முறை:
கொண்டக்கடலையை முந்தின நாள் இரவே ஊற வைக்கவும், அல்லது 6 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் கொண்டைக் கடலையுடன் உப்பு சேர்த்து 5 விசில்களுக்கு வைத்து எடுக்கவும். 

தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு வெந்தக் கொண்டைக் கடலையைச் சேர்த்து வதக்கவும். சுண்டல் ஒன்று சேர்ந்ததும் சாம்பார் தூளைச் சேர்த்துச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கி இறக்கவும்.
விருப்ப மானவர்கள் தேங்காயைத் துருவிச் சேர்த்துக் கொள்ளலாம், அவ்வாறு செய்யும் போது சாம்பார் பொடி சேர்க்காமல் மிளகாய் வற்றல் அளவைக் கூட்டிச் செய்யலாம்.
Tags:
Random Posts Blogger Widget