வீட்டிலேயே இயற்கை சீயக்காய் தூள் செய்ய !





வீட்டிலேயே இயற்கை சீயக்காய் தூள் செய்ய !

0
கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
வீட்டிலேயே இயற்கை சீயக்காய் தூள்
இயற்கையான பொருள்களை கொண்டு வீட்டிலேயே சிகைக்காய் பொடி தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். 
தேவையான பொருள்கள்
முதியவரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொலை செய்த வேலையாள் !
சிகைக்காய் – 1/2 கிலோ

பூலாங்கிழங்கு – 100 கிராம்

பச்சைப்பயறு – 100 கிராம்

கரிசலாங்கண்ணி – 50 கிராம்

வெந்தயம் – 100 கிராம்

பூந்திக்கொட்டை – 100 கிராம்

ஆவாரம்பூ- 50 கிராம்

செம்பருத்தி – 50 கிராம்

உலர்ந்த ஆரஞ்சு பழத்தோல் – 10 கிராம்

உலர்ந்த எலுமிச்சை தோல் – 10 கிராம்
கறிவேப்பிலை – 50 கிராம்

செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளை நன்றாக வெயிலில் காய வைத்து அரைத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும். 

பயன்கள்

தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சீயக்காய் குழைத்து 15 நிமிடங்கள் ஊற வைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும். ரொம்ப வாசனையாக இருக்கும்.

11 மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த சிகைக்காய் தூளை வாரம் இரு முறை கூந்தலுக்கு தேய்த்து குளித்து வர தலைமுடி கருமையான மென்மையான கூந்தலை பெறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)