இயான்ஸ் சில்லி சிக்கன் செய்வது எப்படி?





இயான்ஸ் சில்லி சிக்கன் செய்வது எப்படி?

கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதத்தின் மூலங்கள், நீங்கள் குறைவான உணவு எடுத்துக் கொண்டாலும், நிறைவான உணர்வை கொடுக்கக் கூடியது. 
இயான்ஸ் சில்லி சிக்கன்
அதாவது, உங்களின் யானைப்பசியை போக்க, சிறிதளவு சிக்கன் போதுமானது. உடல் எடையை குறைக்க டயட் செய்பவர்களுக்கு இது மிகவும் நல்ல உணவு. 

கோழிக்கறியில் செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்திக்கு உதவும் டிரிப்டோபான் (Tryptophan) உள்ளது. இந்த செரோடோனின் ஹார்மோன் உடலின் புத்துணர்ச்சிக்கு உதவும் ஹார்மோன் ஆகும். 

இதனால், உடல் சோர்வு நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இரத்த சோகை, இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்கள் அடிக்கடி உடல் சோர்வு பிரச்சனையை சந்திப்பார்கள். 

அடிக்கடி சிக்கன் உட்கொள்வது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. அத்துடன், உடல் சோர்வை நீக்கி நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.  

சிக்கன் துண்டுகளை எண்ணெய் சேர்க்காமல் அவித்து சாப்பிடுவது, தேவையற்ற LDL கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எண்ணெயில் பொரித்து, வறுத்து சாப்பிடுவது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தேவையான பொருட்கள்
சிக்கன் போன்லெஸ் - 100 கிராம்,

வெங்காயம் - 1,

இஞ்சி - 1 துண்டு,

பச்சை மிளகாய் - 3 துண்டு,

வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்,

சர்க்கரை - 10 கிராம்,

ஒய்ட் வெப்பர் - 1 ஸ்பூன்,

மைதா,

கார்ன் மாவு - 50 கிராம்,

உப்பு - தேவைக்கு.

செய்முறை

முதலில் கோழியை மைதா, கார்ன் மாவு, முட்டை அதனுடன் உப்பு போட்டு கலக்கி வைத்து 5 நிமிடம் உலர வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். 

பிறகு ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். 
பிறகு ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அதனுடன் சர்க்கரை, வினிகர், ஒயிட் பெப்பர், கார்ன் மாவு போட்டு திக் பண்ணவும். 

பின்பு பொரித்து வைத்திருந்த சிக்கனைப் போட்டு எடுக்கவும். பின்பு நல்லா ட்ரை பண்ணவும். பிறகு ஒரு சின்ன தட்டில் போட்டுக் கொள்ளவும். அதனுடன் பொரித்த இஞ்சியை போடவும்.
Tags: