லெமன் ரைஸ் செய்வது எப்படி?





லெமன் ரைஸ் செய்வது எப்படி?

தேவையானவை:
அரிசி - 200 கிராம்,

எலுமிச்சம்பழம் - 2,

கடுகு - கால் டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - ஒன்று,

பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

பெருங்காயத்தூள் - சிறிதளவு, வறுத்து,

தோல் நீக்கிய வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
லெமன் ரைஸ்
எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு பிழிந்து கொள்ளவும். குக்கரில் ஒரு பங்கு அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு... 3 விசில் வந்ததும் இறக்கவும். 
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... நறுக்கிய பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கவும். 

வறுத்த கலவையில் சாதம் சேர்த்துக் கலந்து, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து சீராகக் கலந்து பரிமாறவும்.
Tags: