சுரைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி? | Zucchini Wheat Curry !





சுரைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி? | Zucchini Wheat Curry !

0
தேவையானவை:
நறுக்கிய சுரைக்காய் – ஒரு கப்,

கெட்டி மோர் – 2 கப்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள:

துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்,

கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்,

சீரகம் – ஒரு டீஸ்பூன்,

தனியா – ஒரு டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 2,

இஞ்சி – ஒரு சிறிய துண்டு,

துருவிய தேங்காய் – கால் கப்.

தாளிக்க:

கடுகு – ஒரு டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – ஒன்று,

கறிவேப்பிலை – சிறிதளவு,

எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:
சுரைக்காய் மோர் குழம்பு செய்வது

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, தனியா, சீரகம் ஆகிய வற்றை அரை மணி நேரம் ஊற வைத்து…

தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

சுரைக்காயை பெரிய துண்டுக ளாக நறுக்கி… உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைவேக்காடு பதத்துக்கு வேக வைத்து எடுக்கவும்.

கெட்டி மோரில் அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கி… உப்பு, சர்க்கரை, அரை டம்ளர் நீர் சேர்த்து அடி பிடிக்காமல் கொதிக்க விடவும். 

இதனுடன் வெந்த சுரைக்காயை யும் சேர்த்து நுரை பொங்கி வந்ததும் இறக்கி… தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்க்கவும்.

குறிப்பு:

இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால்… உடல் இளைக்கும். சுரைக்காய் சாப்பிடுவ தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)